Published : 07 Feb 2014 07:33 PM
Last Updated : 07 Feb 2014 07:33 PM
கேஸ் நேரடி மானியத் திட்டத்தால் குழப்பம் நிலவுவதாக மத்திய அரசின் மீது புதுவை முதல்வர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் ரூ.30-க்கு 3 எல்இடி பல்புகளை தரும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். இத்திட்டப்படி 3 பழைய குண்டு பல்புகளை தந்துவிட்டு, புதிதாக 3 எல்இடி பல்புகளை பெறலாம். ரூ.30 செலுத்தினால் போதும்.
புதிய திட்ட தொடக்க நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசியது:
"புதிய திட்டங்களை புதுச்சேரியில் மத்திய அரசு தொடங்குகிறது. குறிப்பாக கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு நேரடி மானியத் திட்டம் புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்ட செயல்பாட்டால் குழப்பம் நிலவுகிறது. மக்களுக்கு மானியத்தொகை சேர்வதில் பிரச்சினை உள்ளது. சங்கடமும் இருக்கிறது. பிரச்சினை வரும்போது அதை சரிசெய்து தர வேண்டியது சம்பந்தப்பட்ட துறையின் கடமை. புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டால் அதில் என்ன பாதிப்பு என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
எல்இடி பல்புகளை தரும் திட்டத்தை புதுச்சேரியில் தொடங்க முதலில் ஒத்துக்கொள்ளவில்லை, அதில் எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அதை கேட்டேன். அதற்கான விளக்கத்தை மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
புதுவைக்கு தேவையான மின்சாரத்தில் காரைக்காலில் 32 மெகாவாட் சொந்தமாக உற்பத்தியாகிறது. இதை 100 மெகாவாட்டாக உயர்த்த முடிவு எடுத்தோம். இதற்கு தேவையான எரிவாயுவை மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை" என்றார் புதுவை முதல்வர் ரங்கசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT