Published : 28 Feb 2014 10:00 AM
Last Updated : 28 Feb 2014 10:00 AM
நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை திருடப்பட்ட குழந்தையை போலீஸார் வியாழக்கிழமை மீட்டதுடன், குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணையும் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருந்த திருக் கண்ணபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி கீர்த்திகாவின் குழந்தையை, புதன்கிழமை பெண் ஒருவர் திருடிச் சென்றுவிட்டார்.
மருத்துவமனையில் இருந்த கேமராவில் பதிவான காட்சி களைப் பார்வையிட்டு, அந்தப் பெண்ணை போலீஸார் அடையா ளம் கண்டனர்.
மேலும், மருத்துவ மனையில் இருந்த பர்வீன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் நாகப்பட்டினம் ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த ஜெரால்டு மனைவி சத்யாவை வியாழக்கிழமை கைது செய்து, குழந்தையை மீட்டனர். மேலும், இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னியிடம் ஒப்படைத்தனர். தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் முனுசாமியும் மருத்துவமனைக்கு விரைந்தார்.
பின்னர், கீர்த்திகா- பாலகிருஷ் ணன் தம்பதியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. திருடுபோன 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸாருக்கு தம்பதி இருவரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
சத்யாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், திருமண மாகி இரண்டாண்டுகளாகியும் குழந்தை பிறக்காததால், வயிற் றில் துணியைச் சுற்றி கர்ப்பம் தரித்ததுபோல கடந்த சில மாதங்களாக வீட்டாரையும், ஊர்மக்களையும் சத்யா நம்ப வைத்துள்ளார்.
அவர்களது நம்பிக்கையையும் உறுதிப்படுத் துவதற்காக மருத்துவ மனையில் இருந்து குழந்தையைத் திருடிச் சென்றாராம்.
போலீஸார் சத்யா வீட்டுக்குச் சென்றபோது, குழந்தையை புது துண்டு விரித்து படுக்க வைத்து கொசுவலை போர்த்திப் பாதுகாப்பாக சத்யா வைத்திருந்தாராம்.
குழந்தையின் அருகில் பால் பவுடர், பால்புட்டி என்று குழந்தைக்கான அத்தனைப் பொருட்களையும் அவர் வாங்கி வைத்திருந்தாராம்.
குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் ஆட்சியர் முனுசாமி. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி.
திருமணமாகி குழந்தை பிறக்காததால், வயிற்றில் துணியைச் சுற்றி கர்ப்பம் தரித்ததுபோல கடந்த சில மாதங்களாக வீட்டாரை சத்யா நம்பவைத்துள்ளார்.அதை உறுதிப்படுத்துவதற்காக குழந்தையைத் திருடிச் சென்றாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT