Published : 29 Aug 2016 09:15 AM
Last Updated : 29 Aug 2016 09:15 AM
உயர் நீதிமன்றம் பராமரித்து வரும் 20 கோடிக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணங்கள், நிர்வாகக் கோப்பு களை டிஜிட்டல் மயமாக்க டெண் டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது.
உயர் நீதிமன்றங்களில் தாக்க லாகும் வழக்குகளில் விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும் நிலையில் வழக்குக் கட்டுகள் ஆவண அறைகளில் ஆண்டுக் கணக்கில் கட்டி வைக்கப்படுகின் றன. இந்த கட்டுகள் தூசிபடிந்து சேதமடைந்து வருகின்றன.
பழைய வழக்குகளை கையாளும்போது அதில் உள்ள தூசியால் ஒவ்வாமை ஏற்படு கிறது. இதற்கு பயந்தே பழைய வழக்குகளை விசாரணைக்கு எடுக்கத் தயங்குகின்றனர். மிகப் பழைய வழக்குக் கட்டுகள் மற்றும் ஆவணங்களை பராமரிக்கும் ஆவண அறைகளில் பணிபுரியும் ஊழியர்களும் நுரையீரல் சம்பந் தப்பட்ட நோய்களுக்கு ஆளாகின் றனர்.
இந்நிலையில் பழைய வழக்கு கட்டுகள், நிர்வாகக் கோப்பு களை ஸ்கேன் செய்து சேமித்து வைக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்காக உயர் நீதிமன்றம் டெண்டர் அறிவிப் பாணை வெளியிட்டுள்ளது. இதில் ரூ.100 கோடி வர்த்தகம் நடைபெறும் நிறுவனங்கள் விண் ணப்பிக்கலாம் என அறிவித்துள் ளது.
பணி உத்தரவு வழங்கும் நாளில் இருந்து 12 மாதங்களில் பணியை முடித்துத் தர வேண்டும். அதில் தவறும்பட்சத்தில் டெண் டர் ரத்து செய்யப்படும் அல்லது தாமதத்துக்கான அபராதம் விதிக் கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறும்போது, “வழக்கு கட்டுகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்போது ஆவணங் களைப் பாதுகாப்பதும், கணினி யில் படிப்பதும் சுலபமாக இருக் கும். ஆண்டுக் கணக்கில் தூசி படிந்து கிடக்கும் பழைய வழக்கு களை விரைந்து விசாரிப்பதற்கு டிஜிட்டல்மயம் உதவி செய்யும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT