Published : 27 Dec 2013 05:09 PM
Last Updated : 27 Dec 2013 05:09 PM
தேமுதிகவுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு குறித்து தேர்தல் சமயத்தில்தான் சொல்ல முடியும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:
டெல்லியில் மத்திய அமைச்சர் கபில் சிபிலை, கனிமொழி எம்.பி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறாரே? மீண்டும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமையுமா?
பிறந்த நாள் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொள்வது அரசியல் மரபு. அதை வைத்து கூட்டணி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
இப்போதைய நிலையில் தி.மு.க. கூட்டணியில் எந்த,எந்த கட்சிகள் உள்ளன?
தி.மு.க.வை ஏற்கெனவே ஆதரித்த கட்சிகள் இப்போதும் கூட்டணியில் இருக்கின்றன.
தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?
தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி பற்றி சொல்ல முடியும். இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார் மு.க.ஸ்டாலின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT