Published : 20 Aug 2016 01:47 PM
Last Updated : 20 Aug 2016 01:47 PM
மதுரை மாநகராட்சி மேயராகும் எதிர் பார்ப்பில் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏ-க்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிள் இந்த முறை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. வரும் உள்ளாட்சித்தேர்தலில் நேரடியாக மக்களே மேயரை தேர்வு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலர்களே மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்யும் பழைய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் தீவி ரமாக நடக்கிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடரே இன்னும் முடிவடையாததால் உள்ளாட்சித்தேர்தல் தள்ளிபோகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகள் உள்ளாட்சித்தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதிமுக ஆளும்கட்சியாக இருப்பதால் அக்கட்சியில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர், இந்த முறை மேயர் பதவியை குறிவைத்து காத்திருந்தனர். ஆனால், கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் முறை நடைமுறை அறிவிக்கப் பட்டதால் இவர்கள் ஆரம்பத்தில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட தயக்கினர்.
இந்நிலையில் அதிமுக ஆளும் கட்சியாக இருப்பதால் கவுன்சிலர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அதிகாரபலம், பணபலத்தால் உறுதியாக வெற்றி பெற்றுவிடலாம் என, அக்கட்சியினர் நினைக்கின்றனர். அதனால், தமிழகம் முழுவதும் அதிமுகவில் முன்னாள் அமைச்சர், முன்னாள் மாவட்டச் செயலா ளர்கள், முன்னாள் எம்.எல்ஏ., க்கள், முன்னாள் எம்.பிக்கள், தற்போது கட்சியில் முக்கிய அதிகார மையங்களாக உலா வரும் முக்கிய பிரமுகர்கள், மேயர் கனவில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஏ.கே.போஸ், ராஜாங்கம், துணை மேயர் திரவியம், மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, சட்டமன்ற தேர்தலில் வடக்கு தொகுதி வேட்பாளராகி கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்ட எம்.எஸ்.பாண்டியன், டேவிட் அண்ணாத் துரை, பகுதி செயலாளர் சாலைமுத்து, கவுன்சிலர் சீனிவாசன் உள்பட ஏராளமான நிர்வாகிகள், மேயர் கனவுடன் இந்தமுறை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்கின்றனர். யார் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய முடியாமல் கட்சியினர் தவிக்கிறார்கள். இதற்கிடையே மாநகர செயலாளர் அமைச்சர் கே.ராஜு, இவர்கள் யாருக்கும் பிடி கொடுக்காமல் இருக்கிறார். அதனால், பல நிர்வாகிகள் மேலிட நிர்வாகிகள் மூலம் மேயராகும் உத்தரவாதத்துடன் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்கின்றனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏக்கள், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல் வியடைந்தால் அவர்களுடைய அரசியல் எதிர்காலமே பாழாகிவிடும்.
அப்படியே கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டாலும், மேயர் வேட்பாளராக தலைமை அறிவிக்காவிட்டால், 5 ஆண் டுகள் கவுன்சிலர் என்ற நிலையில் தங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்ற கவலை அவர்களுக்கு இருந்தது. அதனால், அவர்கள் தங்களின் மேயர் கனவு கலைந்து போனதாகவே நினைத்தனர். திமுக, மற்ற கட்சிகள் இந்த முறை உள்ளாட்சித்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்காது என்பதால் போட்டியிட பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
ஆளும்கட்சியாக இருப்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்பதால் முக்கிய நிர்வாகிகள் மேயர் ஆசையில் போட்டியிட ஆர்வமாகியுள்ளனர்.
இந்த முறை 50 சதவீதம் பெண்களுக்கு உள்ளாட்சிப்பதவி வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளதால் அதிமுகவில் பெண் நிர்வாகிகளும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT