Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM
அரசியல் சுயலாபத்துக்காகவும், ஓட்டுக்காகவும் ஆந்திராவை துண் டாட நினைக்கும் காங்கிரசின் நாடகத்தை வெளிப்படுத்தவும், அதற்கு எதிராக ஆதரவு திரட்டவும் தமிழக முதல்வரை சந்திக்க வந்தேன். அவரும் ஆதரவு தருவதாகக் கூறியுள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலி தாவின் இல்லத்தில் அவரை வியாழக்கிழமை சந்தித்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:
சுய லாபத்துக்காக காங்கிரஸ்...
ஆந்திர மாநில பிரிவினை பிரச்சினை விஷயமாக பேசுவதற்காக தமிழக முதல்வர் ஜெய லலிதாவை சந்தித்தேன். ஒரு மாநிலத்தின் பிரிவினை என்பது அங்குள்ள மக்களின் நலனுக்காக ஏற்பட வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சி அரசியல் சுய லாபத்துக்காக சாக்கடை அரசியல் நடத்தி வருகிறது.
ஒத்த கருத்தை எட்ட வேண்டும்.....
தெலங்கானா பிரிவினையை நியாயமான வகையில் செய்ய வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்டு, ஒத்த கருத்து எட்டப்பட்ட பின்னரே நடவடிக்கையை தொடங் கியிருக்க வேண்டும். இரு பிராந்தியங்களுக்கும் (தெலங் கானா, ராயலசீமா) நியாயம் கிடைக்க வேண்டும். நெறிகளை மீறி, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 3-ஐ காங்கிரஸ் தவறாகப் பயன் படுத்துகிறது.
இதுவரையில் மாநில மறுசீரமைப்பு குழுவோ, கமிஷன்களோ, கமிட்டியோ அமைக்கப் பட்டே, மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் சட்டமன்றத்தை கேட்காமலேயே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 3-ஐ, காங்கிரஸ் அமல் படுத்த முயற்சிக்கிறது.
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.....
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அவர்கள் பிரிவினைக்கான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர். இப்பிரிவினை முயற்சியை பல்வேறு விவாதங்
கள் நடத்திய பின்னர் சுமுகமான முறையில் நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும். தற்போது இது தேசிய பிரச்சினை யாகியுள்ளது.
காங்கிரஸ் நாடகம்
டிஆர்எஸ் கட்சித் தலைவர், பிரிவினைக்குப் பிறகு காங்கிரசுடன் கட்சியை இணைப்பதாக சொல்லி யிருக்கிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், தேர்த லுக்குப் பிறகு காங்கிரசுடன் கைகோர்த்துவிடுவார்.
தெலுங்கு பேசும் மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட எங்கள் கட்சி மட்டும் இரு பிராந்தி யத்துக்காகவும் குரல் கொடுத்து வருகிறது.
சோனியா தலைமையிலான காங்கிரஸ் செயற்குழுமுடிவினை, ஆந்திர காங்கிரஸ் தலைவர் பொச்சா சத்தியநாராயணா எதிர்த் துள்ளார். பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தெலங் கானாவுக்கு ஆதரவான தீர்மானத்தை, சட்டமன்றத்தில் ஆந்திர முதல்வர் எதிர்த்துள்ளார். இது ஒரு நாடகம். இதை ஜெயலலிதாவுக்கு எடுத்துரைத் தேன். இப்பிரச்சினை சுமுகமாக முடிய அவரும் உதவ வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தேன்.
அரசியல் பேசவில்லை
கூட்டாட்சிக்கு பங்கம் விளை விக்கும் வகையில் காங்கிரஸ் நடக்கக் கூடாது. அவர்களது கையில் இருக்கும் மத்திய அரசை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதே எனது கருத்து.
தெலங்கானாவை பிரிக்க வேண்டும் என்றால் சீமாந்திரா மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும், ஒன்றுபட்ட ஆந்திரம் தொடர வேண்டுமெனில், தெலங் கானா மக்களின் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும். இரு தரப்பி னரையும் குடியரசுத் தலைவர் அழைத்துப் பேசி சுமுக முடிவு எடுக்கவேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் 356-ஐ பயன்படுத்தி என்டிஆர், எம்ஜிஆர் ஆட்சிகளைக் கலைத்தவர்கள் காங்கிரஸார். அவர்களுக்கு நெறி
முறைகள் தெரியாது. தேர்தல் அரசியலுக்காக மக்களின் வாழ்க் கையுடன் விளையாடக் கூடாது. இன்னும் 10 நாளில் தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது. தெலங்கானா பிரிவினைக்கு என்ன அவசரம். நாடு எப்படி முக்கியமோ, அதுபோல் மாநில நலனும் முக்கியம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு
சுமார் 30 நிமிடப் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் சந்திரபாபு நாயுடுவின் சந்திப்பு குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கூறும்போது, ’மாநில சுயாட்சி முறை குறித்து, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னை சந்தித்துப் பேசினார். அவர் கூறியதுதான் எனது கருத்தும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT