Published : 03 Apr 2017 10:08 AM
Last Updated : 03 Apr 2017 10:08 AM
உயர் நீதிமன்ற, மாவட்ட நீதி மன்ற அரசு வழக்கறிஞர்களை அரசியல்ரீதியாக நிரப்பாமல், தகுதி அடிப்படையில் நிரப்ப வேண்டும். அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல, இப்பணிகளில் அரசு குற்ற வழக்கு நடத்துநர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் நியமனம் முறையாக நடக்கவில்லை என்று கூறி வழக்கறிஞர் வி.வசந்தகுமார் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ‘ஆளுங்கட்சி ஆதரவாளர்களே அரசு வழக்கறிஞர்களாக பணியில் அமர்த்தப்படுகின்றனர். உயர் நீதி மன்ற அரசு தலைமை வழக்கறிஞர் (அட்வகேட்ஜெனரல்) முதல் மாவட்ட, முன்சீப் நீதிமன்றங்களில் உள்ள அரசு வழக்கறிஞர் பதவி வரை அரசியல்ரீதியிலான நியமன மாகவே மாறிவிட்டது. உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி, தகுதியான, திறமையான, அனுபவமிக்கவர் களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அப் போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இதுசம்பந்தமான வரைவு விதிகளை மூத்த வழக் கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.எல்.சோமயாஜி ஆகியோரைக் கொண்டு உருவாக்கினார். இது குறித்து அரசின் ஆலோசனை களையும் கோரியிருந்தார். கவுல் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி யாக பதவி உயர்வில் சென்று விட்டார்.
இந்த நிலையில், அண்மையில் பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘‘அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது அரசின் நிர்வாக ரீதியிலான நட வடிக்கைக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிடத் தேவை யில்லை’’ என்று கூறி வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற, மாவட்ட அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை அர சியல்ரீதியாக நிரப்பாமல், டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்த வேண் டும் என்று கீழமை குற்றவியல் நீதிமன்றங்களில் பணிபுரியும் ஏபிபி எனப்படும் அரசு குற்ற வழக்கு நடத்து நர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு வழக்கறி ஞர்கள் சங்க மாநில செயலாளர் டி.ஏ.முகம்மது சிக்கந்தர் கூறிய தாவது:
குற்றவியல் நீதிமன்றங்களில் அரசு வழக்கு நடத்துநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள நாங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, நேரடியாக அரசு வழக்கு நடத்துநர்களாக பதவிக்கு வந்த வர்கள். குற்ற விசாரணை நடை முறை சட்டத் திருத்தம் 2005, பிரிவு 24, 25 ஏ-ன்படி உயர் நீதிமன்ற, மாவட்ட அமர்வு, சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் 3-வது காவல் துறை ஆணையம் மற்றும் மாலிமத் கமிட்டி பரிந்துரைப்படி 50 சதவீத இடங்களை குற்ற வழக்கு தொடர் வுத்துறையில் பணிபுரியும் அரசு வழக்கு நடத்துநர்களான எங்களைக் கொண்டு நிரப்ப கடந்த 16.09.2008-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணை இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 50 சதவீத அரசு வழக்கறிஞர்களின் பணியிடம் குற்ற வழக்கு தொடர் வுத்துறை மூலமாகவே நிரப்பப்படு கிறது.அர்ச்சனா ராமசுந்தரம் உள் ளிட்ட பல போலீஸ் அதிகாரிகள் இத்துறையின் இயக்குநராக இருந் துள்ளனர். குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 25 ஏ-ன்படி தற்போது இதே துறையில் துணை இயக்குநராக பணிபுரிந்த எஸ்.சண்முகம் நேரடியாக குற்ற தொடர்வுத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றிதான்.
ஆனாலும், மற்ற மாநிலங் கள்போல தமிழகத்திலும் அரசு வழக்கறிஞர்களின் நியமனத் தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தகுதியின் அடிப்படையில் எங்க ளுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 50 சதவீத அரசு வழக்கறிஞர்களின் பணியிடம் குற்ற வழக்கு தொடர்வுத்துறை மூலமாகவே நிரப்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT