Published : 31 Jan 2014 05:26 PM
Last Updated : 31 Jan 2014 05:26 PM
திருநெல்வேலி மாநகரின் முக்கிய அடையாளமான வண்ணார் பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் சிறுகச்சிறுக சேதமடைந்து வருகிறது. இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட் டால், பாலம் பெரு மளவில் சேதமடையும் அபாயம் உள்ளது.
திருநெல்வேலி மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்ணார் பேட்டையில் மேம்பாலம் கட்ட, திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த ஏ.எல்.சுப்பிரமணியன் முயற்சி மேற்கொண்டார்.
ரூ.16 கோடியில் பாலம்
இப்பகுதியில் ரூ.16 கோடியில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதி அளித்தது. இந்த மேம்பாலம் அமைக்க வண்ணார்பேட்டை தெற்கு - வடக்கு புறவழிச்சாலையிலும், வண்ணார்பேட்டை ரவுண்டா னாவில் இருந்து ஒருபுறம் சந்திப்புக்கும், மறுபுறம் பாளை யங்கோட்டைக்கும் செல்லும் திருவனந்தபுரம் சாலையிலும் வாகனப் போக்குவரத்து குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
திருவனந்தபுரம் சாலையில் வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் 1 மணி நேரத்துக்கு 12 ஆயிரம் இருசக்கர, 3 சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் செல்வது கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் தெற்கு- வடக்கு புறவழிச் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு, 4 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே கடந்து சென்றன.
இதனால், மேம்பாலத்தை கிழக்கு - மேற்காக அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்திரு ந்தனர். ஆனால், பெரும் வணிக நிறுவனங்களின் நெருக்குதலால், கிழக்கு - மேற்காக அமைப்பதற்கு பதில், வடக்கு - தெற்காக வண்ணார்பேட்டை புறவழிச் சாலையில் அமைக்கும் தவறான முடிவை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து, திட்டத்தையும் செயல்படுத்தின.
குறையாத நெரிசல்
கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அப்போதைய தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாலத்தை போக்குவரத்து பயன்பா ட்டுக்கு திறந்து வைத்தார். ஆனால், எதிர்பார்த்தபடி வண் ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெருக் கடி குறைவதற்கு பதிலாக அதிகரித்தது.
கிழக்கு - மேற்காகவும், மேற்கு - கிழக்காகவும் பாளையங்கோட்டை- திருநெல்வேலி சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் மேம்பால த்தின் கீழ்பகுதியை கடப்பதில் பிரச்சினைகள் உருவெடுத்தன. ஒருவழியாக வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வட்டமடித்து செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைத்து, அதுவே தற்போதும் நடைமுறையில் இருக்கிறது.
ஆக்கிரமிப்பு அதிகம்
முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் செல்லபாண்டியன் பெயரில் உள்ள இந்த பாலத் தின் கீழ்பகுதியை பலர் ஆக்கிரமித்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, விரைவு போக்குவரத்து கழக பணிமனைகள் பாலத்தின் இருபுறமும் இருக்கின்றன.
தொழிற் சங்கத்தினர் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் பாலத்தின் அடியில் நடத்தப்படுகின்றன. இதற்காக கொடி தோரணங்களும், பேனர்களும் மேம்பாலத்தில் கட்டப்படுகின்றன.
ஹோட்டல்கள், தங்கும் விடுதிக்கு வரும் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் பகுதி யாக வடக்குபுறத்தை மாற்றியிருக் கிறார்கள். மேம்பாலச் சுவர் களில் சுவரொட்டிகளும், ஆளுங்கட்சி யினரின் பிளக்ஸ் போர்டுகளும் கட்டப்படு கின்றன. இதற்காக ஆணிகள் அடிக்கப்படுகின்றன. ஆங் காங்கே சுவரொட்டிகளும் ஒட்டப் படுகின்றன.
இதனால், மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதிகள் சிறுக சிறுக சேதமடைந்து வருகின்றன. பக்கவாட்டு பகுதியில் மரங்கள் வேர்விட்டு வளர்ந்து வருவதால், கீறல்கள் தோன்றியிருக்கின்றன. இந்த மரங்களை மட்டுமல்ல, ஆக்கிரமிப்புகளையும், பால த்தை சேதமடைய வைக்கும் பிற காரணிகளையும், தொடக்கத் திலேயே கிள்ளி எறியாவிட்டால், மேம்பாலம் பெருமளவில் பழுதுபடும் அபாயம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT