Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM

பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது:

நாடாளுமன்றத் தேர்தலுக்காக நான் பல பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன். சாதிப்பாகுபாடு காரணமாக சில சமூக விரோத சக்திகளால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் சுதந்திரமாக நடமாடுவதும், ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஏற்கெனவே பரவாக்கோட்டை என்ற இடத்திலும், திருவண்ணா மலை மாவட்டம் சாத்தனூர், செம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் துறையிடம் கோரிக்கை மனு அளித்திருந்தேன். எனினும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகவே, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை எனக்குப் போதிய பாதுகாப்பு வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தமனுநீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 25- ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x