Published : 19 Mar 2014 12:14 PM
Last Updated : 19 Mar 2014 12:14 PM

வைகோவை தோற்கடிக்க ராஜபக்சே திட்டம்?- மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியவர்கள் தகவல்

வைகோவை தோற்கடிக்க திமுக, ஸ்டெர்லைட் நிறுவன ஆதரவு குழுக்கள் மற்றும் இலங்கை அரசுக்கு ஆதரவானவர்கள் திட்டமிட்டுள்ளதாக, மதிமுக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

வைகோவை நாடாளுமன்றத் தில் நுழைய வைப்பதே லட்சியம் என்று வைகோவிடம் மாவட்டச் செயலாளர்கள் இக்கூட்டத்தில் உறுதி அளித்துள்ளனர். திமுகவுக் கான அழகிரி எதிர்ப்பு அலையை பயன்படுத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. மதிமுக உயர்மட்டக் குழு, ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. காலை 11 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை, உள்ளரங்கில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.

இதுகுறித்து கட்சி வட்டாரங்க ளில் கிடைத்த தகவல்கள் வருமாறு: கூட்டத்தில் பேசிய அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, நரேந்திர மோடிதான் பிரதமராக வர உள்ளார். அவரது அமைச்சரவையில் மதிமுக கண்டிப்பாக அங்கம் வகிக்க வேண்டும். இதை பாஜகவிடம் மதிமுக உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து பல்வேறு மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகி கள் பேசும்போது, வைகோவை எப்படியும் தோற்கடித்து விட வேண்டுமென்று, இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பிலிருந்து சிலருக்கு உத்தரவு வந்துள்ள தாகவும், இதற்காக பல்வேறு வகை யான எதிர்ப்பு பணிகளை காங்கிர ஸார் மூலமோ அல்லது வேறு குழுக்கள் மூலமோ மேற் கொள்ள லாம் என்றும் இதை முறியடிக்க வேண்டுமென்றும் பேசினர்.

சில தென் மாவட்டச் செயலாளர் கள் பேசும்போது, விருதுநகர் திமுக வேட்பாளர் அக்கட்சி பொருளாளர் ஸ்டாலினின் நேரடி தேர்வு என்பதாலும், அழகிரிக்கு எதிர்ப்பாளர் என்பதாலும் அவரை வெற்றி பெறச் செய்ய திமுக பாடுபடும் என்றும், அதனால் வைகோவை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகள் திமுக தரப்பிலும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோல், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வைகோ பல்வேறு முயற்சிகள் மேற்கொள் வதால், அவரை நாடாளு மன்றத்திற்கு வரவிடாமல் தடுக்க ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தரப்பு, பணி செய்வதாகவும் ஒரு சில நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் வைகோ பேசும்போது, திமுக, ஸ்டெர்லைட், ராஜ பக்ஷேவின் ஆதரவு குழுக்கள் ஆகியோரின் எதிர்ப்பை மீறி, மக்கள் செல்வாக்கால் வெற்றி பெற பாடுபடுவோம் என்று கூறியுள் ளார். மேலும், ஒன்பது தொகுதிகள் பாஜகவில் கேட்ட நிலையில் எட்டு தொகுதிகள் முடிவானது. ஆனால் ராம்ஜெத்மலானி மூலமாக, மோடி தரப்பிலிருந்து மேலும் ஒரு தொகுதி விட்டுக் கொடுக்க கேட்டுக் கொண்டதால், ஏழு தொகுதிகளுக்கு சம்மதித் தோம் என்று வைகோ விளக்க மளித்தாராம். வேட்பாளர்களின் தேர்தல் செலவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 60 லட்சத்துக்குள் முடித்துக் கொள் ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இறுதியாக விருதுநகர் தொகுதி யில் வைகோவை பெரும் வெற்றி பெற வைக்க, திமுக வேட்பாளருக்கு எதிராக செயல்படும் அழகிரி ஆதரவாளர் களை பயன்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கட்சியின் மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x