Published : 30 Mar 2014 11:56 AM
Last Updated : 30 Mar 2014 11:56 AM
ஜம்மு அருகே தீவிரவாதத் தாக்கு தலில் பலியான விழுப்புரத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 45 குண்டுகள் முழங்க சனிக் கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூர் அருகே முகையூரைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மகன் அந்தோணி நிர்மல் விஜய் (31). இவர் கடந்த 2001 ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார்.
இந்த நிலையில் வெள்ளிக்கி ழமை காலை ஜம்முவில் ஆர்ட்லரி பிரிவில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தீவிரவாதி கள் தாக்குதலில் அந்தோணி நிர்மல் விஜய் பலியானார். இதையடுத்து அவரது உடல் சனிகிழமை விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது.
அங்கிருந்து, ராணுவ வேன் மூலம் உடல் சனிக்கிழமை மாலை அவரது சொந்த ஊரான முகையூருக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் முகையூரில் உள்ள தேவாலயத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கிருந்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு முகையூ ரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் 45 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருக்கோவிலூர் கோட்டாட்சி யர் சுபேத்குமார், திருக் கோவிலூர் டி.எஸ்.பி ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அந்தோணி நிர்மல் விஜயக்கு திருமணமாகி பவுலின் நிர்மலா (27) என்ற மனைவியும், நிர்மல் சபரினா (6), நிர்மல் ஜோஸ்னா (3) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT