Published : 07 Dec 2013 12:00 AM
Last Updated : 07 Dec 2013 12:00 AM

ஜெயலலிதா தலைமையில் டிச.11 முதல் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு

சென்னையில் டிசம்பர் 11-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி யில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் டிசம்பர் 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் முதல் நாளன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறும்.

இரண்டாம் நாளான 12-ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்க ளுக்கான கூட்டமும் 13-ம் தேதி காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் தலைமைச் செயல கத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை யின் பத்தாவது மாடியிலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் தங்களது மாவட்டத்தில் என்னென்ன அரசுத் திட்டங்கள், எவ்வாறாக அமல்ப டுத்தப்பட்டு வருகிறது என்று கணினி வரைபடம் வாயிலாக முதல்வருக்கு மாவட்ட ஆட்சி யர்கள் விளக்கிக் கூறுவார்கள்.

இதுபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், காவல் ஆணையர்களும் தங்க ளது மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்தும், அதை கையாளும் விதம் குறித்தும் முதல்வருக்கு விளக்க மாக எடுத்துரைப்பார்கள். இரு தரப்பு அதிகாரிகளும், தங்க ளுடைய மாவட்டங்களின் தேவைகள் என்ன என்பதனை முதல்வரிடம் தெரிவிப்பார்கள். அவற்றையெல்லாம் பரிசீலித்து, மாநாட்டின் இறுதி நாள் உரையில் புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்.

343 அறிவிப்புகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாட்டில், 343 அறிவிப்புகளை முதல்வர் வெளியி ட்டார். பெண்களுக்கெ திரான வன்கொடுமைகளைத் தடுக்க 13 அம்ச திட்டங்களை யும் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x