Published : 31 Mar 2014 12:37 PM
Last Updated : 31 Mar 2014 12:37 PM
சென்னை புரசைவாக்கத்தில் அரசு குழந்தைகள் நலக்குழுமம் உள்ளது. இங்கு சைல்டு லைன் மற்றும் சிறப்புக் காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
தற்போது குழந்தைகள் நலக் குழுமத்தில் 31 மீட்கப்பட்ட குழந் தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பரிசு, அருவி ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் தோட்டக் கலை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 20 இயற்கை மண் மற்றும் உரம் மூட்டைகளைக் கொண்டு தக்காளி, பச்சை மிளகாய், முள்ளங்கி, அவரைக்காய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகிய செடிகளை வளர்க்கும் முயற்சி யில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து குழந்தைகள் நலக்குழுமத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மீட்கப்படும் குழந்தைகள் பல்வேறு சமூகப் பின்னணியிலிருந்து வருகின்றனர். இவர்களுக்கு புதன்கிழமைகளில் குழந்தைகள் உரிமைச் சட்டம், சரியான மற்றும் தவறான தொடுதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வுக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதியதாக ஆரம்பிக் கப்பட்டுள்ள தோட்டக் கலை பயிற்சியின் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவி இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT