Published : 23 Jun 2016 11:04 AM
Last Updated : 23 Jun 2016 11:04 AM

சீன ஆதிக்கத்தில் சர்வதேச நார் சந்தை: மூடப்படும் தமிழக தென்னை நார் தொழிற்சாலைகள்

சர்வதேச நார் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தால், கேரளத்தைப் போல தமிழகத்திலும் நார் தொழிற்சாலைகள் நலிவடைந்து மூடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் பொள்ளாச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட பரவலாக தமிழகத்தில் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. பொள்ளாச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன.

மதுரை மாவட்டத்தில் வாடிப் பட்டி, சோழவந்தான் பகுதியில் 27 நார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த தொழிற் சாலைகளில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் 98 சதவீதம் தென்னை நார் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்கள் வழியாக கப்பலில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2 சதவீத நார் மட்டுமே உள்ளூர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

சர்வதேச சந்தையில், கடந்த 5 ஆண்டுகளாக நீடிக்கும் சீனாவின் பெரியண்ணன் ஆதிக்கம், வட மாநில பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு அதிகரிப்பால் கேரளத்தில் நார் தொழிற்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டுவிட்டன. தற் போது தமிழகத்திலும் இத்தொழிற் சாலைகள் நலிவடைந்து சத்த மில்லாமல் மூடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வாடிப்பட்டி கரட்டுப்பட்டியைச் சேர்ந்த நார் தொழிற்சாலை உரிமையாளர் டென்னிசன் கூறியதாவது:

சர்வதேச அளவில் சீனாவில் தான் அதிகளவு நார் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அங்கு, நாரில் இருந்து கால் மிதியடி, மாவாக்கி அதிலிருந்து மரப் பொருட்கள், அலங்காரப் பொருட்களை தயாரிக்கின்றனர். அதனால், சீனா மட்டுமே அதிகளவு நார் இறக்குமதி செய்வதால், இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் உற்பத்தியாகும் நார் விலையை அந்நாடே நிர்ண யிக்கிறது. அதனால், அவர்கள் தமிழகத்தில் இங்குள்ள வியாபாரி கள் மூலம் அடிமாட்டு விலைக்கு நார் கொள்முதல் செய்கின்றனர்.

வியாபாரிகள் எங்களிடம் ஒரு கிலோ நாரை 8 ரூபாய்க்கு வாங்குகின்றனர். அவர்கள் 14 ரூபாய்க்கு சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். முன்பு ஒரு டன் ரூ.22 ஆயிரத்துக்கு விற்ற நார், தற்போது ரூ.14 ஆயிரத்துக்கு ஏற்றுமதியாகிறது. டாலர் விலை வீழ்ச்சி அடைந்தால், இந்த விலை மேலும் குறையும். இந்த தொழிலில் அரசு ஒத்துழைப்பு பெரியளவில் இல்லை. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுள்ளனர். தற்போது நார் தொழிற்சாலைகள் மூடப்படுவதாலும், உற்பத்தி குறைந் ததாலும் இந்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்றார்.

80 நாடுகளில் வரவேற்பு

இதுகுறித்து வாடிப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு நார் தயாரிப் பாளர் சாந்தனு கூறியது: தென்னை நார் தயாரிக்கவே இந்த தொழிற்சாலையைத் தொடங்கி னோம். ஆனால், தற்போது தென்னை நார் தயாரிப்பில் வீணா கும் கழிவு துகள்களே எங்களுக்கு வருமானத்தை தருகின்றன.

வளமான மண் வளம் இல்லாத 80 வெளிநாடுகளில், தமிழகத்தில் ஏற்றுமதியாகும் தென்னை நார் கழிவு துகள்களைக் கொண்டே முழுக்க முழுக்க விவசாயம் நடை பெறுகிறது. செடிகளுக்கு இடப் படும் உரம், மருந்துகளை மண்ணே பாதி உறிஞ்சி விடுகிறது. மறுபாதி தான் செடிகளுக்கு போய்ச் சேரும். ஆனால், தென்னை நார் துகள் களில் சாகுபடி செய்தால் செடி களுக்கு நேரடியாக மருந்து, உரங்களை செலுத்தலாம். அதனால், தமிழக தென்னை நார் துகள்களுக்கு ஆண்டு முழுவதுமே வெளிநாடுகளில் வரவேற்பு உள் ளது. இந்த துகள்களை கிலோ 14 ரூபாய்க்கு எடுக்கின்றனர் என்றார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x