Published : 16 Aug 2016 08:40 AM
Last Updated : 16 Aug 2016 08:40 AM
சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சென்னையில் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங் களில் கஞ்சா விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவுப்படி போலீஸார் அதிரடி நடவடிக்கை யில் இறங்கினர். சென்னை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
புளிந்தோப்பு பகுதியில் நடத்தப் பட்ட சோதனையில் கடந்த வாரம் முத்துலட்சுமி(25), ஆனந்த வல்லி(28) என்ற 2 பெண் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் எழும்பூர் ரயில் நிலையத்திலும் வெவ்வேறு தினங்களில் மொத்தம் 137 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு 30 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை போலீஸார் இந்த ஆண்டு மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 166 வழக்குகளை பதிவு செய்து 260 கஞ்சா வியாபாரிகளை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, காவல்துறை கூடுதல் ஆணையர் தாமரைக் கண்ணன் கூறும்போது, “சென் னையில் உள்ள 12 காவல் மாவட் டங்களிலும் துணை ஆணையர் கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரி கள் கைது செய்யப்பட்டு வருகின் றனர். கஞ்சா நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கஞ்சா வியாபாரிகள் நேரடியாக களத்தில் இறங்குவது இல்லை. மாறாக ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை ரயில் மூலமும், பஸ் மூலமும் சென்னைக்கு முகவர்கள் மூலம் கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர் போர்வையில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் துணிகளுக்கு இடையே வைத்து கஞ்சாவை கிலோ கணக்கில் கொண்டு வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினால் பிடிபட்டுவிடுவார்கள் என்பதால் முந்தைய நிறுத்தங்களிலேயே இறங்கிவிடுகின்றனர்.
பஸ் மூலம் கடத்தி வரப்படும் கஞ்சா கோயம்பேடு பஸ் நிலை யத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து மொத்த வியாபாரி களின் கைகளுக்கு செல்கிறது. அவர்கள் கஞ்சாவை பொட்டலம் போட்டு விற்பனை செய்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றோம்.
சில பள்ளி, கல்லூரி மாண வர்களும் கஞ்சா பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். சாதாரண தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதை விட மாணவர் களுக்கு அதிக விலைக்கு வியாபாரிகள் விற்கின்றனர். ஒரு சிலர் மட்டும் இன்னும் பிடிபடாமல் உள்ளனர். அவர்களையும் விரைவில் கைது செய்வோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT