Published : 11 Dec 2013 08:11 AM
Last Updated : 11 Dec 2013 08:11 AM
பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் உடனடியாக அறிவித்தார். அது தொடர்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. தேர்தல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் பதவி காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 6 மாதத்துக்குள் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்குள் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும் என்பதால், அதனுடன் சேர்த்தே ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் தனியாக ஒரு இடைத்தேர்தலை நடத்தும் செலவு தேர்தல் ஆணையத்துக்கு குறைந்துவிடும்.
எதிர்க்கட்சி அந்தஸ்து
பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமாவைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் தேமுதிக பலம் 28 ஆக குறைந்துள்ளது. அதிலும் 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பக்கம் தாவினால், எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக இழக்க நேரிடும். அடுத்த நிலையில் உள்ள திமுக, எதிர்க்கட்சியாகிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT