Published : 16 Jun 2017 09:49 AM
Last Updated : 16 Jun 2017 09:49 AM
அரசு போக்குவரத்துக் கழக ஊழி யர்களுக்கு நிலுவைத்தொகை வழங்குவதற்காக மேலும் ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்கள் பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கடந்த மே 15 முதல் 17 வரை வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு டன் நடைபெற்ற பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் 31.3.2017 வரை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,155.99 கோடியும், பணியில் உள்ள ஊழியர் களுக்கு ரூ.5,074.75 கோடி நிலுவைத் தொகையும் வழங்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே இரு அரசாணைகள் மூலம் ரூ.496.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் அனைவருக் கும் 3 மாதத்தில் நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசாணை வெளியீடு
இந்நிலையில் அரசு போக்கு வரத்துக்கழக ஓய்வுபெற்ற ஊழியர் கள், பணியிலுள்ள ஊழியர் களுக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்காக ரூ.500 கோடி ஒதுக்கி கூடுதல் தலைமைச் செயலர் ஜூன் 9-ம் தேதி அரசாணை (எண்- 51) வெளியிட்டுள்ளார்.
இந்த ரூ.500 கோடியில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க ரூ.458.01 கோடியும், பணியிலுள்ள ஊழியர் களுக்கு சம்பளத்தில் இருந்து எல்ஐசி, பிஎல்ஐ பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க ரூ.41.99 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் வரவு
சென்னை மெட்ரோபாலிடன் அரசு போக்குவரத்துக் கழகத் துக்கு ரூ.24.89 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.36.07 கோடி, அரசு போக்கு வரத்துக்கழக விழுப்புரம் கோட் டத்துக்கு ரூ.78.60 கோடி, சேலம் கோட்டத்துக்கு ரூ.55.08 கோடி, கோவை கோட்டத்துக்கு ரூ.99.06 கோடி, கும்பகோணம் கோட்டத் துக்கு ரூ.86.12 கோடி, மதுரை கோட்டத்துக்கு ரூ.67.30 கோடி, நெல்லை கோட்டத்துக்கு ரூ.52.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணம் அந்தந்த அரசு போக்குவரத்துக்கழகக் கோட்டங் களின் கணக்கில் வரவு வைக்கப் பட்டு, விரைவில் சம்பந்தப்பட்ட ஓய்வுபெற்ற, பணியில் உள்ள ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT