Published : 07 Sep 2016 11:50 AM
Last Updated : 07 Sep 2016 11:50 AM

குழந்தைகளை மகிழ்விக்க சிறுவர் படகு இல்லம்: மதுரை மாநகராட்சி பூங்காக்களில் ஏற்படுத்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுரை மாநகராட்சி பூங்காக்களில் குழந்தைகளை மகிழ்விக்க சிறுவர் போட்டிங் (படகு இல்லம்) தொடங்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாநகராட்சி விரிவாக் கத்துக்கு முன் 72 வார்டுகளில் 53 பூங்காக்கள் இருந்தன. புறநகர் பகுதிகளில் மூன்று நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் மற்றும் 11 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்ட பின், மாநகராட்சி வார்டுகள் 100 ஆக உயர்ந்தது. இங்குள்ள பூங்காக்கள் எண்ணிக்கையும் சேர்த்து தற்போது 202 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் ராஜாஜி பூங்கா, ஈக்கோ பார்க், திருப்பரங்குன்றம் ஈக்கோ பார்க்குக்கு மட்டுமே குழந்தைகள் வருகை கணிசமாக உள்ளது.

மற்ற பூங்காக்கள் பொதுமக்கள், குழந்தைகள் வருகையின்றி பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கின்றன. இந்த பூங்காக்கள் மூலம் எதிர்பார்க்கும் வருவாய் கிடைக்காததால் பராமரிக்கவும், புது பொலிவுப்படுத்தவும் மாந கராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது பூங்காக்களை அம்ரூத் திட்டத்தில் பொலிவுபடுத்த மாநக ராட்சி நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது.

பூங்காக்களில் குழந்தைகளைக் கவர புதிய விளையாட்டு உபகர ணங்கள், பொழுதுபோக்கு அம்சங் கள் ஏற்படுத்தப்படுகின்றன.

ராஜாஜி பூங்கா, ஈக்கோ பார்க் உள்ளிட்ட பூங்காக்களில் குழந்தைகளை மகிழ்விக்க போதிய விளையாட்டு உபகர ணங்கள் இல்லை. பழைய உபகரணங்களுடனேயே செயல் படுகின்றன. இவற்றில் பல உபகரணங்கள் பழுத டைந்து கிடக்கின்றன. பல பூங்காக்கள் கோயில், தனியார் ஆக்கிரமிப் புகளால் காணாமல் போகிறது.

மதுரை வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா, ஆன்மிக நகரமாக உள்ளது. அதனால் ராஜாஜி பூங்கா, ஈக்கோ பூங்காக்களில் குற்றாலம் சிறுவர் பூங்காவை போல் குழந்தைகளை மகிழ்விக்க சிறுவர் போட்டிங் (படகு இல்லம்) ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது: குற்றாலம் சிறுவர் பூங்காவில் செயற்கை சிறுவர் படகு இல்லம் செயல்படுகிறது. 3 முதல் 4 அடி ஆழம் வரை மெகா பிளாஸ்டிக் கிணற்றில் தண்ணீர் நிரப்பி குழந்தைகள் கையை வைத்தும், கால்களை கொண்டு இயக்கக் கூடிய சிறிய ரக படகுகள் விடப்பட்டுள்ளது. தண்ணீர் ஆழம் இல்லாததால் குழந்தைகள் அச்சமின்றி படகுகளை அவர்களே தண்ணீரில் இயக்கி மகிழ்கின்றனர். படகில் குழந்தைகள் தவறி தண்ணீரில் விழுந்தாலும் ஆபத்து இல்லை. பெற்றோர், அல்லது பயிற்றுநர்கள் உடனே சென்று குழந்தைகளை தூக்கி விடலாம்.

இந்த சிறுவர் படகு இல்லம் அமைக்க அதிக செலவும் ஆகாது. பூங்கா டெண்டர் எடுத்தவர்களையே ஏற்பாடு செய்ய அறிவுறுத்தலாம். இதைப் போன்ற படகு இல்லத்தை ராஜாஜி பூங்கா, ஈக்கோ பார்க், திருப்பரங்குன்றம் ஈக்கோ பார்க் உள்ளிட்ட நகர், புறநகரில் முக்கியத்துவம் வாய்ந்த பூங்காக்களில் தொடங்க வேண்டும். இதனால், பூங்காக்களுக்கு குழந்தைகள் வருகை அதிகரிக்கும். மாநகராட்சிக்கும் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x