Published : 10 Nov 2013 12:23 AM Last Updated : 10 Nov 2013 12:23 AM
ஏற்காடு இடைத்தேர்தல்: கருத்து கணிப்புக்கு தடை
ஏற்காடு இடைத்தேர்தலையொட்டி பத்திரிகைகளும், ஊடகங்களும் கருத்து கணிப்பு வெளியிடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், டெல்லி, சத்தீஸ்கர், உள்பட 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் (ஏற்காடு) நடைபெறும் இடைத்தேர்தல்களில் பத்திரிகைகள், ஊடகங்கள் கருத்து கணிப்பு வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பையும், வாக்களித்துவிட்டு வெளியே வருவோரிடம் கருத்துக் கேட்டு வெளியிடும் கணிப்பையும் வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது.
அதுபோல மேற்கண்ட தேர்தல்கள் முடியும் 48 மணி நேர காலக்கட்டத்தில் இந்த தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT