Published : 04 Nov 2013 01:51 PM
Last Updated : 04 Nov 2013 01:51 PM

காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நவ.8-ல் ஆர்ப்பாட்டம்: சரத்குமார்

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில், மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சமத்துவ மக்கள் கட்சி இம்மாதம் 8–ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இலங்கை அரசின் மீதும் குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே மீதும் குற்றச்சாட்டுகள் உலகெங்கிலும் இருந்து வருகிறது.

தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் இதை வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றி உலகத்தமிழர்கள் அனைவரது ஒட்டுமொத்த உணர்வுகளை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக சேனல் 4–ல் ஒளிபரப்பப்பட்ட தமிழீழப் பெண் இசைப்பிரியாவின் கொடூர மரணம் கல்மனங்களைக் கூட கரைய வைப்பதாக இருக்கும் போது மத்திய அரசின் மெத்தனம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது.

எனவே, மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரும், இந்தியாவின் பிரதிநிதிகளும் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் கண்ட ஆர்ப்பாட்டங்கள் வரும் 8.11.2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x