Last Updated : 16 Oct, 2014 10:34 AM

 

Published : 16 Oct 2014 10:34 AM
Last Updated : 16 Oct 2014 10:34 AM

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை: மென்பட்டு புடவைகள், குர்த்திகள் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன் னிட்டு பெண்களைக் கவரும் மென் பட்டுப் புடவைகள், குர்த்திகள், ஆண்களுக்கான மேட்சிங் பட்டுச் சட்டை, வேட்டிகளை கோ-ஆப் டெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், தமிழகத்தில் 130 கிளைகள் உட்பட 200 கிளைகளில் ஆடைகளை விற்பனை செய்துவரு கிறது. தனியார் நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகை யில் பல்வேறு புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர் களைக் கவர்ந்துவருகிறது.

இது குறித்து கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:-

கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.120 கோடி. இந்த ஆண்டுக்கான விற்பனை இலக்காக ரூ.182 கோடியை நிர்ணயித்துள்ளோம். ஏராளமான புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுவரை ரூ.70 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் (நிப்ட்) பயின்ற 5 நிபுணர்கள் குழு, கோ-ஆப்டெக்ஸ் ஆடை வடிவமைப்பில் புதுப்புது உத்திகளை புகுத்தி வருகிறது. இந்த சீசனுக்கு மென்பட்டு (சாப்ட் சில்க்) என்னும் எடை குறைவான, விலை குறைவான (ரூ.6000-9000) புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை, ஷோரூமுக்கு வந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதுபோல், முதல் முறையாக மூன்று சைஸ்களில் பெண்களுக்கான குர்த்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர கைத்தறி-பாலியஸ்டர் கலவையில் தயாரிக்கப்பட்ட சல் வார் கமீஸ்களும் பல வண்ணங் களில் தருவிக்கப்பட்டுள்ளன.

ஆண்களுக்கு

ஆண்களுக்காக, முதல் முறையாக மேட்சிங் வேட்டி-சட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பளிச்சென்ற நிறத்திலான பட்டுச்சட்டைகளுடன் அதே நிறத்தில் பார்டர் கொண்ட மேட்ச்சிங் வேட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல், ரெடிமேட் ஆடைகளும் ஏராளமாக உள்ளன. மேற்கண்ட ரகங்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. அரசு ஊழியர்களுக்கு 6 மாத வட்டியில்லா தவணை முறை உண்டு. மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது விற்பனை இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு டி.என்.வெங்கடேஷ் கூறினார்.

பேஸ்புக்கில் கோ-ஆப்டெக்ஸ்

கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம், இளம்தலைமுறையினரைக் குறி வைத்து புதிய ரகங்களை அறி முகப்படுத்தி வருவதால், அவர் களைக் கவர பேஸ்புக்கிலும் தனது பக்கத்தினை (www.facebook.com/cooptex.handloom?fref=ts) அண்மையில் தொடங்கியுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் தெரிவிக் கும் கருத்துகளைக் கொண்டு, அதற்கேற்ப ஆடை வடிவமைப் பில் மாற்றங்களைப் புகுத்தவும் திட்டமிட்டுள்ளது. எனவே, வாச கர்கள் தங்கள் கருத்துகளை அதிக அளவில் தெரிவிக்க வேண்டும் என்று கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x