Published : 17 Aug 2016 12:20 PM
Last Updated : 17 Aug 2016 12:20 PM
தமிழக காவல்துறையில் சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வுக்கான காலவரையறை 25 ஆண்டுகள் என்பதை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதவி உயர்வுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் தலைமைக் காவலர்கள் எதிர்பார் க்கின்றனர்.
தமிழகத்தில் 1,450 காவல்நிலை யங்கள் செயல்படுகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை 1.22 லட்சம். தற்போது 1 லட்சம் பேர் தான் பணிபுரிகின்றனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி யிடங்கள் உள்ளன. இவர்களில் 40 ஆயிரம் முதல் நிலை (கிரேடு-1) காவலர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமைக் காவலர்களும் பணியாற்றுகின்றனர். பணியில் சேர்ந்து, துறை ரீதியாக எவ்வித குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகாத தலைமைக் காவலர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பின், சிறப்பு எஸ்ஐ (எஸ்எஸ்ஐ) பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், வருவாய், வேளாண், ராணுவம் உள்ளிட்ட பிற துறைகளில் பணி யாற்றுவோர் 25 ஆண்டுகளில் பல்வேறு பதவி உயர்வுகளை அடைய முடிகிறது.
ஆகவே சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வுக்கான கால அளவைக் குறைக்க வேண்டும் என தலைமைக் காவலர்கள் வலியு றுத்துகின்றனர்.
இதுகுறித்து தலைமைக் காவலர்கள் கூறியதாவது: காவல் துறையில் 2011-ம் ஆண்டுக்குப் பின் உதவி ஆய்வாளர் தேர்வும், 2012-ம் ஆண்டுக்கு பின்னர் போலீஸ் தேர்வும் இல்லை. தற்போது, இத்துறையில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இருந்தும் பதவி உயர்வுக்கு நீண்டகால அளவை பின்பற்றும் நிலை உள்ளது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதல்நிலை தலைமைக் கா வலர்கள் பணிபுரிகிறோம். சிறப்பு எஸ்ஐ. பதவி உயர்வுக்கான கால அளவை 20 ஆண்டுகளாகக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT