Published : 16 Mar 2014 12:01 PM
Last Updated : 16 Mar 2014 12:01 PM
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் தமிழக இணைத் தலைமை தேர்தல் அதிகாரி அஜய்யாதவ் சனிக்கிழமை கூறியதாவது:
நடத்தை விதிகள் மீறல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்பட தேர்தல் தொடர்பான அனைத்து புகார் களையும் பொதுமக்கள் தெரி விக்க வசதியாக மாநில அளவில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் சராசரியாக 100 முதல் 150 புகார்கள் வருகின்றன. அதிகபட்சமாக 750 புகார்கள்கூட வந்துள்ளன. தற்போது பொது மக்களின் வசதிக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி விவரம்:
இந்த கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் (ஹெல்ப்லைன்) அல்லது இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த வசதியை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எஸ்.எம்.எஸ்.-ல் வாக்குச்சாவடி விவரம்
வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி குறித்த விவரங் களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி, செல்போனில் மெசேஜ் அனுப்பும் பகுதியில் EPIC என்று குறிப்பிட்டு ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவுசெய்து 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும்.
அடுத்த சில வினாடிகளில் வாக்காளரின் சட்டமன்றத் தொகுதி எண், தொகுதி பெயர், வாக்குச் சாவடி எண், வாக்காளர் பெயர், வாக்குச்சாவடி முகவரி ஆகிய விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அஜய் யாதவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT