Published : 04 May 2017 11:11 AM
Last Updated : 04 May 2017 11:11 AM
அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின்னணி எதுவும் இல்லை. கட்சி தலைமையின் எதிர்ப்பு இல்லாததால் வெற்றி கரமாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித் துள்ளனர்.
மதுரையில் நேற்று அதிமு க(அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக ஆர்ப் பாட்டம் நடந்தது. அதிமுக தொண்டர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத் துக்கும் அதிகமானோர் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங் கேற்றனர்.
அதிமுக புறநகர் மாவட்ட இணைச் செயலாளர் ராமசுப்பு, மதுரை மாநகர் தொழில்நுட்ப பிரிவு தலைவர் உமாகணேசன், மாவட்ட மாணவரணி முன்னாள் துணைச் செயலாளர் வெற்றிப்பாண்டி, பகுதிக்கழக முன்னாள் பொரு ளாளர் செழியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினகரனுக்கு ஆதரவாக தமிழகத்தில் எங்குமே ஆர்ப்பாட்டம் நடைபெறாத நிலையில், மதுரையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது குறித்து நிர்வாகிகள் ராமசுப்பு, வெற்றிப்பாண்டி கூறியது:
தனக்கு பணியாத அதிமு கவினரை பாஜக பல்வேறு வழிகளில் பழிவாங்குகிறது. தினகரனை கட்சித் தலைமை ஏற்க வருமாறும், துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்கும்படியும், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட் டியிடுமாறும் அதிமுக முக்கிய நிர்வாகிகள்தான் வற்புறுத்தினர்.
ஓபிஎஸ் அணி இணைய வருவதாகவும், அதற்கு அவர்கள் விதித்த நிபந்தனையையும் ஏற்று சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அறிவித்தனர். இதை தினகரனும் ஏற்று ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால், எதிர்பார்த்தபடி பேச்சுவார்த்தையும், இணைப்பும் நடக்கவில்லை. இதில் தோற்றது அதிமுக(அம்மா) அணிதான். தினகரனை ஒழிக்க ஓபிஎஸ் அணி போட்ட திட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சொதப்பிவிட்டனர். பேச்சு தோல்வியடைந்த நிலையில், ஓபிஎஸ் அணியிலிருந்து சில எம்எல்ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து நெருக்கடி தந்திருக்கலாம். இதிலும் தோல்வியே மிஞ்சியது. இங்கிருந்துதான் சிலர் ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளனர்.
தினகரன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி அவர் சந்திப்பார். கட்சியை அழிக்க நினைக்கும் பாஜக தொடர்ந்து சதி செய்து சிக்க வைத்துள்ளது. தினகரன் சிறைக்கு சென்ற நிலையில், தலைமை இல்லாமல் அதிமுக தத்தளிக்கிறது. கட்சியை காப்பாற்ற வந்த தினகரனுக்கு ஆதரவாக எதுவுமே நடக்கவில்லையே என நினைத்தபோது மிகவும் வேதனையடைந்தோம்.
இதே நிலை நீடித்தால் கட்சி அழிந்து, தொண்டர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இதனால் தினகரனுக்கு ஆதரவாக எங்கள் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். 30 பேர் பூங்காவில் கூடி ஆலோசித்தோம். பேஸ்புக், வாட்ஸ் அப்பில் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினோம். இதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது.
ஆர்ப்பாட்டம் நடத்த தலைமை ஏற்குமாறு நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகியோரை அழைத்தோம். புகழேந்தி வந்தார். பகுதி செயலாளர்கள் சிலர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். எங்கள் ஏற்பாட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தாலும், நேரடியாக பங்கேற்பதை தவிர் த்தனர். அதேநேரம், எங்கள் ஆர்ப்பாட்டத்தை கட்சி தலைமை எதிர்க்கவில்லை.
அப்படி எதிர்த்திருந்தால் காவல்துறை அனுமதி கிடைத்திருக்காது. ஆர்ப்பாட்ட செலவுகளை நிர்வாகிகளே பகிர்ந்து கொண்டோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தோர் பங் கேற்றனர். வரும் நாட்களில் இந்த உணர்வு மேலும் வலுப்பெற்று, மாநிலம் முழுவதும் பரவும்.
சூழ்ச்சியால் சிக்கவை க்கப்பட்டுள்ள தினகரனை மற்றவர் களைப்போல் நாமும் வேடிக்கை பார்த்தால் உண்மையான அதிமுக தொண்டராக இருக்க முடியாது. 1.50 கோடி தொண்டர்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதை காட்ட வேண்டும். அந்த உணர்வுடன்தான் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். வேறு எந்த பின்னணியும் இல்லை. யாரும் பணம் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தும்படி எங்களை நிர்பந் திக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவி த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT