Published : 03 Jan 2016 12:52 PM
Last Updated : 03 Jan 2016 12:52 PM

திறந்தவெளியில் காலி ‘குளுக்கோஸ்’பாட்டில் குவியல்: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரக்கேடு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் திறந்தவெளியில் காலி ‘குளுக்கோஸ்’ பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுகின்றன. நாள் கணக்கில் இவை அள்ளப்படாமல் மலை போல குவிந்திருப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனை யில் தினமும் 3 ஆயிரம் உள் நோயாளிகளும், 9 ஆயிரம் வெளி நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். வார்டுகளில் அனுமதிக்கப்படும் உள்நோ யாளிகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும், தாது உப்பு களை சமநிலைப் படுத்தவும் மருத்து வர்கள் ‘குளுக்கோஸ்’ ஏற்றுவர். ஒரு நாளைக்கு உள் நோயாளி களுக்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட ‘குளுக்கோஸ்’ பாட் டில்கள் செலுத்தப்படும். மருத்து வமனை வார்டுகள் மற்றும் மருந்து குடோன்களில் தினமும் சேரும் இந்த ‘குளுக்கோஸ் காலி பாட்டில்கள், மருத்துவக் கழிவுகள் மற்றும் மற்ற காலி மருந்து பாட்டில்களை திறந்த வெளியில் வீசாமல் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

ஆனால், காலி ‘குளுக்கோஸ்’ பிளாஸ்டிக் பாட்டில்களை நெஞ் சகநோய் சிகிச்சைப் பிரிவு எதிரே திறந்த வெளியில் மருத்துவப் பணியாளர்கள் வீசி செல்கின்றனர். இப்பகுதியில் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவுகள், இதய சிகிச்சைப் பிரிவும் உள்ளது. நாள் கணக்கில் காலி பாட்டில்கள் அள்ளப்படாமல், தற்போது மலை போல் குவிந்து கிடப்பதால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. காலி பாட்டில்களில் நன்னீர் தேங்குவதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, மருத்துவமனை உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் இரவு நேரத்தில் கொசுக்கடியால் நோயாளிகள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

திறந்த வெளியில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், உடனுக்குடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மருத்துவமனை உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, காலி ‘குளுக்கோஸ்’ பிளாஸ்டிக் பாட்டில்கள் மருத்துவக் கழிவு இல்லை. இந்த பாட்டில்களை டெண்டர் எடுத்தவர்கள் எடுத்துச் செல்லாமல் விட்டதால் தேங்கி விட்டது. இதனால், மற்ற நோயாளி களுக்கு பாதிப்பு எதுவும் ஏற் படாது. விரைவில் அகற்ற ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x