Published : 02 Sep 2016 09:29 AM
Last Updated : 02 Sep 2016 09:29 AM
திருச்சியில் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை இளைஞர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற போது, அச்சமடைந்து ஒதுங்கிச் சென்றுவிடாமல் பொதுமக்கள் திரண்டதாலேயே அந்த மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் ரவி. திருச்சி விமான நிலைய காவல் நிலைய தலைமைக் காவலர். இவரது மனைவி பாத்திமா, கன்டோன் மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர். இவர்களது மகள் மோனிகா (21), திருச்சி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
பிச்சாண்டார்கோவில் கள்ளர் தெருவைச் சேர்ந்த முத்துமணி மகன் பாலா என்ற பாலமுருகன் (26). தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார்.
பாலமுருகனுக்கும் மோனிகா வுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாகவும், இதை யறிந்த இருவரின் பெற்றோரும் கண்டித்ததால் 2 ஆண்டுகளுக்கு முன் இருவரும் விஷம் குடித்து மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படு கிறது.
பின்னர், பெற்றோரின் அறிவுறுத் தலின்பேரில் பாலமுருகனுடனான பழக்கத்தை மோனிகா நிறுத்திக் கொண்டார். ஆனாலும், பால முருகன் மோனிகாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2 நாட் களுக்கு முன் மோனிகாவை அவர் படிக்கும் கல்லூரி அருகே வழிமறித்த பாலமுருகன், தன் னுடன் மீண்டும் பழகுமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து தன் தாயிடம் மோனிகா கூறியதையடுத்து அவர், பாலமுருகனை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் கல்லூரி முடிந்து பிச்சாண் டார்கோவில் பேருந்து நிறுத்தத் தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த மோனி காவை, அங்கு ஏற்கெனவே வந்து காத்திருந்த பாலமுருகன் வழிமறித் துள்ளார். ஆனால், அவரை கண்டு கொள்ளாமல் மோனிகா நடந்து சென்றதால் ஆத்திரமடைந்த பால முருகன், தான் கொண்டு வந்தி ருந்த கத்தியால் சரமாரியாக மோனிகாவை குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில், மோனிகாவின் உடலில் 10-க்கும் அதிகமான இடங்களில் கத்திக் குத்து விழுந்த நிலையில், சாலையிலேயே மயங்கி விழுந் தார். இதைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் பாலமுருகனைப் பிடித்து போலீ ஸில் ஒப்படைத்தனர். அப்போது, தற்கொலை செய்து கொள்ளத் திட்டமிட்டு ஏற்கெனவே விஷம் குடித்துவிட்டு வந்தே மோனிகாவை குத்தினேன் என போலீஸாரிடம் பாலமுருகன் கூறியுள்ளார்.
கத்திக்குத்தில் காயமடைந்த மோனிகா திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ள நிலையில், தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்ட பால முருகனும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
4 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலமுரு கன் மீது தரக்குறைவான வார்த்தையால் திட்டுதல் 294 (B), வழிமறித்தல் (341), பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (Sec 4), கொலை முயற்சி (307) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
4 மணி நேர அறுவை சிகிச்சை
கத்திக்குத்தில் பலத்த காய மடைந்த மோனிகாவுக்கு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனை யில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அறுவை சிகிச்சை நடை பெற்றது. இதையடுத்து அங்கு அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண் காணிப்பில் உள்ளார்.
பாலமுருகன் கத்தியால் மோனிகாவை குத்தியபோது மோனிகாவின் அலறலைக் கேட்டு அந்தப் பகுதியில் இருந்த பொது மக்கள் பாலமுருகனை பிடிப்பதற் காக ஓடியுள்ளனர். அப்போது, சிலர் கற்களை எடுத்து பாலமுருகன் மீது வீச முயன்றதால், அவர் கத்தியைக் கீழே போட்டுவிட்டு சரணடைவதுபோல நின்றுள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக சுதாரித்துக் கொண்டு அருகில் திரண்டதா லேயே மோனிகா பலத்த காய மடைந்த நிலையில் மீட்கப்பட்டுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்களைக் காணும்போது பொதுமக்கள் அச்ச மடைந்து ஒதுங்கிச் செல்லாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்துகின்றனர்.
பாலமுருகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT