Published : 31 Mar 2014 11:56 AM
Last Updated : 31 Mar 2014 11:56 AM
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் ஞாயிற் றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு கட்சியினரையும், வாக்காளர்களையும் சந்தித்து உரையாற்றி வருகிறேன். இடையறாத பணி களுக்கு இடையே, இந்த கடிதம் வழியாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் என் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய நாளிலி ருந்து இந்த இயக்கம் எத்தனையோ நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நம் இயக்க வரலாற்றில் முதல்முறையாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் வாய்ப்பை இந்தத் தேர்தலில்தான் பெற்றிருக்கிறோம். 2004ல் இருந்து மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கூட்டணி அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. இவற்றின் காரணமாக, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
நாட்டைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு கருவியாக நமக்கு வாய்த்திருக் கிறது. இந்தச் செய்தியை தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுமாறு கட்சியினர் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன். வாக்காளர்களை நீங்கள் ஒவ்வொருவரும் தினமும் சந்திக்க வேண்டும். அதிமுக அரசின் சாதனைகள், முன்னோடித் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.
வஞ்சக நெஞ்சத்தோடு காங்கி ரஸும், தன் குடும்ப நலத்துக்காக திமுகவும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும் கொடுமை களையும் வாக்காளர்கள் உணரும் வகையில் திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம், நேரடி சந்திப்பு மூலம் விளக்கிச் சொல்ல வேண்டும்.
நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, இளம் வாக்காளர்களைக் கவர வேண்டும். 40 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து நீங்கள் அனைவரும் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT