Published : 08 Oct 2013 03:24 PM
Last Updated : 08 Oct 2013 03:24 PM
ஏற்காடு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தயாராகி வரும் அதே நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தேர்தல் துறையினர் தயாராகி வருகின்றனர். இதற்காக மாவட்ட ஆட்சியர்களுடன், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வீடியோ கான்பரன்சிங் (காணொலி காட்சி) மூலம் ஆலோசனை நடத்த தேர்தல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஏற்காடு இடைத்தேர்தல்
வரும் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தல் பணிகளில் தேர்தல் துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. எனினும், வரும் ஆண்டு மத்தியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் அத்துறை முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் அழைத்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒருநாள் பயிற்சி வகுப்பை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நடத்தினார். இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் வரும் 21-ந் தேதி முதல் 3 நாள்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆட்சியர்களுக்கு
ஆட்சியர்களுக்கான பயிற்சி பற்றி தேர்தல் துறையினர் திங்கள்கிழமை கூறியதாவது:
மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுக்குக் கூடுதல் பயிற்சிகள் தேவை என்பதால் அவர்களுக்கு தேர்தல் வரை வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இனி வாரந்தோறும் வியாழக்கிழமை களில் விடியோ கான்பரன்சிங்கில் ஆலோ சனைகள் வழங்கப்படும். அப்போது ஆட்சியர்களின் கேள்விகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் விளக்கம் அளிப்பார்.
ஏற்காடுக்கு தனி வாக்காளர் பட்டியல்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு மட்டும் ஒரு துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளி யிடப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், விண்ணப்பித ்தால் அவர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதிக்குள் துணைப்பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT