Last Updated : 28 Jan, 2014 09:50 AM

 

Published : 28 Jan 2014 09:50 AM
Last Updated : 28 Jan 2014 09:50 AM

நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரிகளுக்குப் பயிற்சி

வரும் மே மாதத்தில் நாடாளு மன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில் தமிழகத்தில் தேர்தல் துறை அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் (ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள்) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள், கடந்த ஆண்டு இறுதியில் வழங்கப் பட்டன.

அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியும், தேர்தல் செலவுக் கணக்குகள் பற்றியும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 400-க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (நோடல் ஆபீஸர்ஸ்), சென்னையில் பயிற்சி அளிக்க தேர்தல் துறை திட்டமிட்டுள்ளது.

அவர்களுக்கு, சென்னையில் வரும் 29-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை, பல்வேறு அம்சங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் துறை யினர் ‘தி இந்து’ நிருபரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:-

வரும் நாடாளுமன்ற தேர்தலில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள நோடல் அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கவுள்ளோம். ஒரு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விஷயங்களை செயல்படுத்த வகைவாரியாக 14 நோடல் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறாக, தமிழகத்தில் 438 அதிகாரிகள் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.

உதாரணத்துக்கு, ‘எஸ்எம் எஸ்’ மூலம் தேர்தல் பணி கண்காணிப்பு, வெப் காஸ்டிங் (இணைய வழி நேரடி ஒளிபரப்பு), புகார் மேற்பார்வைப் பணி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை விநியோகம் போன்றவற்றை கவனிக்க தனித்தனி நோடல் ஆபீஸர்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், பிரிவு வாரியாக, வரும் 29-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை சென்னையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x