Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM
சென்னையில் காய்கறி விலை சமீப காலங்களில் கடுமையாக உயர்ந்து வருகிறது. வீட்டுக்கு அருகில் இருக்கும் மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்களில் விற்கப்படும் காய்கறிகளின் விலை, கோயம்பேட்டில் மொத்த விற்பனை கடைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலையைக் காட்டிலும் சற்று அதிகம் என்பது தெரிந்தாலும், அந்த விலை வித்தியாசத்தை பொதுமக்கள் அறிந்துகொள்வது சற்று சிரமம்.
கோயம்பேடு மொத்த விலை காய்கறி அங்காடியில் விற்கப்படும் ஒரு காய்கறி வகை, நகரின் வெவ்வேறு பகுதிகளில், அதே நாளில், ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு போக்குவரத்துச் செலவுகள், கூலி மற்றும் கடை வாடகை ஆகியவை முக்கிய காரணிகளாகச் சொல்லப்படுகிறது.
எனினும், கோயம்பேடு காய்கறிச் சந்தையின் விலையை ஒட்டியே, அரசு நடத்தும் பண்ணைப் பசுமை காய்கறி கடைகளில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை அமைந்துள்ளது. மற்ற தனியார் கடைகளில் விலை வித்தியாசம் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது.
இந்த விலை வித்தியாசத்தை வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில், காய்கறி விலை நிலவரங்களை வாரம் ஒரு முறை ‘தி இந்து’ வெளியிடவுள்ளது. இதன்மூலம், காய்கறிகளின் உண்மையான விலை நிலவரத்தை சரியாக அளவிட முடியும். கடைக்காரரிடம், “கோயம்பேட்டில் நேற்று இவ்வளவு விலைக்கு விற்ற காய்கறியை, மிக அதிக விலைக்கு விற்பனை செய்தது ஏன்?” என்று தைரியமாக நீங்கள் கேள்வி எழுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT