Published : 20 Jan 2017 10:01 AM
Last Updated : 20 Jan 2017 10:01 AM
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல் லூர்- துறையூர், மண்ணச்சநல்லூர்- து.களத்தூர் ஆகிய வனப் பகுதி சாலைகளில் செம்போத்து பற வைகள் வாகனங்களில் அடிபட்டு தொடர்ந்து பலியாவது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கள ஆய்வு நடத்திய திருச்சி ஜோசப் கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியரும், சூழலியல் ஆராய்ச்சியாளருமான கொ.அசோக சக்கரவர்த்தி, ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
‘‘காகத்தின் உருவத்தைப்போல இருக்கும் செம்போத்து (crow pheasant) பறவை, தமிழீழத்தின் தேசியப் பறவை. இது, செங்காகம் என்றும், பேச்சுவழக்கில் செம்பூத்து என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இறக்கைகள் காப்பர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் - துறையூர் சாலையில் வாகனத்தில் சிக்கி பலியான செம்போத்து பறவை
குயில் குடும்பத்தைச் சேர்ந்த செம்போத்து பறவைகள் பூச்சிகள், கம்பளிப் பூச்சிகள், நத்தைகள், சிறிய பாம்புகள், பழங்கள், விதை களை உட்கொள்ளும். சூழல் சுட்டிக் காட்டிகளாகவும், சுற்றுச்சூழல் பாதுகாவலனாகவும் விளங்கும் பறவை இனங்களில் ஒன்றான செம்போத்து பறவைக்குப் பறக் கும் தன்மை மிகக் குறைவு. சாலை யோரங்களில் இரை தேடும்போது வாகனங்களில் அடிபட்டு இவை பலியாகி வருவது அதிர்ச்சியளிப்ப தாக உள்ளது.
கொ.அசோக சக்கரவர்த்தி
கடந்த ஆண்டு மட்டும் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் - துறையூர் மற்றும் மண்ணச்சநல் லூர் - பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூர் ஆகிய வனப் பகுதி களில் 250-க்கும் அதிகமான செம் போத்து பறவைகள் வாகனங்களில் அடிபட்டு பலியாகி உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தப் பறவை இந்தப் பகுதியில் இல்லாமல் போய்விடும். இதைத் தடுக்க வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப் பகுதிக்குள் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக துறையூர் வனச் சரகர் ரவி கிருஷ்ணாவிடம் கேட்டபோது, “வனப் பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் உள்ள சாலைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எச்சரிக்கை செய்யவும் எச்சரிக்கை மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைத்துள்ளோம்.
தின்பண்டங்கள், பழங்கள், உணவு மிச்சங்கள் என எவ்வித உணவுப் பொருட்களையும் வனப் பகுதி சாலைகளில் பொதுமக்கள் வீசக் கூடாது.
இரவு நேரத்தில் அதிக வெப்பத்தை உமிழும் விளக்குகளை வாகனங்களில் ஒளிரவிடக் கூடாது. வனப் பகுதி யில் உள்ள சாலைகளை எந்த நேரத்திலும் விலங்குகள் கடக்க லாம் என்பதால் வாகனங்களைக் குறிப்பிட்ட வேகத்தில் எச்சரிக்கை யுடன் இயக்க வேண்டும்.
இரை தேடிச் செல்லும் செம் போத்து பறவைகள் வாகனங்களில் அடிபட்டு பலியாவது நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கே அதிக பொறுப்பும், கடமையும் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT