Published : 29 Jun 2017 10:40 AM
Last Updated : 29 Jun 2017 10:40 AM
சட்டப்படி நடக்கும் நேர்மையான அதிகாரிகளையும், சில அரசியல் வாதிகளுக்குச் சாதகமாகச் செயல்படாத அதிகாரிகளையும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யும் போக்கு விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிர்ச்சியடை ந்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் மிளகாய் வர்த்தகத்தில் இந்திய அளவில் தடம் பதிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் தீப் பெட்டி, பட்டாசு, அச்சுத்தொழில் மட்டுமின்றி மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பேண்டேஜ் துணிகள் உற்பத்தியிலும் விருது நகர் மாவட்டத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு.
ஆனால், இத்தகைய சிறப்பு மிக்க விருதுநகர் மாவட்டத்தில் நேர்மையாகவும், சட்டத்திற்கு உட் பட்டும் துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கும் அரசு அதிகாரிகளும், தங்களின் கட்டளைக்கு வளைந்துகொடுக்காத அதி காரிகளும் அரசியல்வாதிகளின் தலையீடுகளால் இடமாற்றம் செய்யப்படும் அவல நிலை தொடர்வதும் வருத்தத்திற்குரியது.
ஆளும் கட்சியினரே காரணம்
கடந்த சில ஆண்டு கால வரலாற்றில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனாலும் சரி, ஐபிஎஸ் அதிகாரி ஆனாலும் சரி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நிம்மதியாகவும் நீண்ட நாட்களுக்கும் பணி யாற்றிய வரலாறு இல்லை. பல்வேறு துறைகளிலும் அரசி யல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்கும் அதிகாரிகள் மட்டுமே தங்களது பதவியை நீண்ட நாள் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற சூழ்நிலை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் அடிக்கடி திடீர் இடமாற்றம் செய்யப்படுவதற்கு ஆளும் கட்சியினரே காரணம் என் கிறார்கள் பொதுநல விரும்பிகள். மேலும், அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தால் அடுத்த சில நாள்களிலேயே அவருக்கு இடமாற்ற உத்தரவு வந்துவிடும் என்றும் இதற்கு அரசியல் புள்ளிகளே முக்கிய காரணம் என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன் இடமாற்றம் செய்யப் பட்டதும் இதற்கு உதாரணம் என்கி றார்கள் அவர்கள்.
அதிரடி
இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களின் அடுத்த குறி விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி. மகேஸ்வரி. பொறுப்பேற்ற இரு மாதங்களுக்குள் அடுத்தடுத்து அதிர டியாக நடத்திய சோதனை, பார்களில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல், அரசி யலில் முக்கிய புள்ளிகளின் பினாமி களுக்குச் சொந்தமானது எனத் தெரிந்தும் நடவடிக்கை எடுத்த துணிச்சல் போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம்.
மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி.யாக மகேஸ்வரி பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் மொத் தம் 288 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
2,991 லிட்டர் மதுபானம், 121 லிட்டர் கள், 56 லிட்டர் சாராய ஊறல்களும் கைப்பற் றப்பட்டுள்ளன. கள்ளத்தனமாக மதுவிற்ற பணம் ரூ.62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 156 வழக்குகள் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1.38 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மதுவகைகள் கடத்தியதாக 4 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 6 பைக்குகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. பாண்டிச்சேரி மதுபானம் கடத்திய 3 பேர், கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவர் என 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் பிரமுகர்கள் அதிர்ச்சி
இதுபோன்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட அதிரடி சோதனை களால், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பார் நடத்தி வரும் அரசியல் பிரமுகர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். திருத்தங்கல், ராஜபாளையம் போன்ற இடங்களில் ஆளும் கட்சிக்கு மிக நெருக்கமா னவர்களால் நடத்தப்பட்ட பார்களிலும் அதிரடியாக சோதனை கள் நடத்தப்பட்டன.
அதையடுத்து, மாவட்ட அமை ச்சரின் உடனிருக்கும் முக்கி நபரின் தூண்டுதலால் மதுவிலக்கு டி.எஸ்.பி.மகேஸ்வரியை இடமாற்றம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரி வித்தன. மேலும், டி.எஸ்.பி. மகேஸ்வரி மீது புகார் மனு தயாரித்த அரசியல் பிரமுகர்கள் அதை அவசரஅவசரமாக விமானத் தில் சென்று டிஜிபியிடம் கொடுத் துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் பிரமுகர்களின் தலையீடுகளால் அடுத்தடுத்து நேர்மையான அதி காரிகள் இடமாற்றம் செய்யப் படுவது விருதுநகர் மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT