Published : 28 Sep 2016 10:06 AM
Last Updated : 28 Sep 2016 10:06 AM

சமையல் கலைஞர்களை நலவாரியத்தில் சேர்க்க மாவட்ட வாரியாக விழிப்புணர்வு பிரச்சாரம்: தென்னிந்திய சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் முடிவு

சமையல் கலைஞர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க மாவட்ட வாரியாக அவர்களைச் சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள தென்னிந்திய சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டல் தொழிலாளர்கள், தனியார் கான்ட்ராக்டர்களிடம் பணி செய்பவர்கள், தனியாக சமையல் தொழில் செய்பவர் கள் என தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் சமையல் தொழிலில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஆனால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையை கொண்ட இவர்கள் அவ்வளவாக கவனிக்கப் படாமலேயே உள்ளனர். கடந்த திமுக ஆட்சியில்தான் சமையல் கலைஞர்களும் நலவாரியத்தின் அங்கத்தினரானார்கள்.

நலவாரியத்தின் உறுப்பினர் களுக்கு விபத்துக் காப்பீடு, குழந்தைகளுக்குப் படிப்பு மற்றும் திருமண உதவித் தொகை, பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை அரசு அளித்து வருகிறது. ஆனாலும், சமையல் கலைஞர் களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் அரசின் சலு கைகள் ஆயிரத்தில் ஒருவரைகூட சென்றடையவில்லை. இதை சரி செய்வதற்கு நல வாரியத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது, இதற்காக தென்னிந்திய சமையல் கலைஞர் கள் முன்னேற்ற சங்கமும் களத் தில் இறங்கியுள்ளது.

இந்தச் சங்கத்தின் கோவை மாவட்ட சூலூர் கிளையின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்ப்பு பிரச்சாரம் மேற் கொள்வது குறித்து அதில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கு றித்து நம்மிடம் பேசிய சங்கத்தின் மேட்டுப்பாளையம் - ஊட்டி கிளை தலைவர் தேக்கம்பட்டி சிவக்குமார், ‘‘பசித்த வயிற்றுக்கு அமுது படைக்கும் சமையல் கலைஞர்களில் 90 சதவீதம் பேர் பணிப் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அடிமட்டத்தில் இருக்கும் சமையல் தொழிலாளர் கள் வேலைக்கு வந்தால்தான் சம்பளம் என்ற நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவுக்காவது கைகொடுக்கத் தான் நலவாரியம் அமைக்கப்பட் டது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய சங்கத்தின் மாநில செயல் தலைவர் பி.என். சுரேஷ், ‘‘அரிசிப் பஞ்சம் இருந்த காலத்தில் நூறு பேருக்கு மேல் கலந்துகொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளுக்குத் தடை இருந்தது. இதனால் சமையல் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்தத் தடையை அகற்றுவதற்கா கத்தான் எங்களது சங்கம் தொடங்கப்பட்டது.

நான் இன்னாரிடம் சமையல் வேலை செய்திருக்கிறேன்; செய்கி றேன் என்று ஆதாரம் கொடுத்தால் வெறும் 20 ரூபாய் நுழைவுக் கட்ட ணத்தில் நலவாரியத்தில் உறுப்பி னர் ஆகிவிட முடியும். நலவாரியத் தின் மூலம் நிறைய சலுகைகள் கிடைக்கின்றன. இதைத் தெரிந்து கொண்டு சமையல் தொழிலுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் இடைத்தரகர்கள் மூலமாக குறுக்கு வழியில் வாரியத்தில் உறுப்பினர்க ளாகிறார்கள். ஆனால், உண்மை யான சமையல் தொழிலாளர்கள் போதிய அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றத்தான் மாவட்ட வாரியாக சமையல் கலைஞர்களை சந்தித்துப் பேச இருக்கிறோம்’’ என்றார்.

மேலும் பேசிய சங்கத்தின் மாநில இணைத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, ‘‘எங்கள் சங்கத் தைச் சேர்ந்த சுமார் 6,200 பேரை இதுவரை நலவாரிய உறுப்பினர் களாக்கி இருக்கிறோம். நலவா ரிய உறுப்பினர் இறந்தால் ரூ.20 ஆயிரம், விபத்தில் இறந்தால் ரூ.2 லட்சம் என பல சலுகைகள் உள்ளன. ஆனாலும் சிதறிக் கிடக் கும் எங்கள் சமூகத்தை ஒருங்கி ணைக்க முடியவில்லை. வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கட்டணச் சலுகையுடன் உயர் கல் வி அளிக்கவும் உறுப்பினருக் கும் அவரது குடும்பத்தினருக்கும் தரமான மருத்துவ சேவைகளை வழங்கவும் அரசு வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x