Published : 01 May 2014 09:09 AM
Last Updated : 01 May 2014 09:09 AM

வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரக நினைவு நிகழ்ச்சி

உப்புச் சத்தியாக்கிரகப் போராட்ட 85-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி வேதாரண்யம் அருகே யுள்ள அகஸ்தியம்பள்ளியில் உப்பளத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் உப்புச் சத்தியாகிரகத்தில் காந்தி யின் தண்டி யாத்திரை அளவுக்கு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற தடையை மீறி உப்பு அள்ளும் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆங்கிலேய அரசால் உப்புக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து நடத்தப்பட்ட இந்த உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் 1930-ம் ஆண்டு ஏப். 30-ல் நடை பெற்றது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த போராட்டத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டு தோறும் நினைவுநாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

உப்புச் சத்தியாகிரகப் போராட் டத்தில் பங்கேற்று தண்டனை பெற்ற சர்தார் வேதரத்தினத்தின் பேரன் வேதரத்தினம் தலைமை யிலான குழுவினர் இந்த ஆண்டு நினைவுநாளையொட்டி புதன் கிழமை காலை வேதாரண்யத்தில் உள்ள நினைவு கட்டிடத்திலிருந்து பாதயாத்திரையாக அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள உப்புச் சத்தியாகிரக நினைவுத் தூணை அடைந்தனர்.

அங்கு நினைவுத்தூணுக்கு மலர்வளையம் வைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்குள்ள உப்பளத்தில் இறங்கி உப்பு அள்ளி போராட்ட நினைவை நினைவுகூர்ந்தனர்.

இதில் சமூக ஆர்வலர் வேதாம் பாள் ஆச்சி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயகுமார், மருத் துவர் ராஜன், காந்தியவாதி சசி பெருமாள், காந்தி தரிசன கேந்திர மருத்துவர் வசந்தா, காங்கிரஸ் நிர்வாகிகள் சிவப்பிரகாசம், சித்திரவேல், இளம்பாரதி, போஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் இருந்து சக்தி செல்வகணபதி தலைமையில் பாதயாத்திரையாக வந்திருந்தவர்களும் இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர்.

நினைவுநாள் விழா ஏற்பாடு களை மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறையின் கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தின்கீழ் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x