Published : 04 Sep 2016 09:50 AM
Last Updated : 04 Sep 2016 09:50 AM
சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள மேம்பாலம், சுற் றுச்சுவர்களில் ‘தி அக்லி இந்தி யன்’ அமைப்பை சேர்ந்த 30 தன் னார்வலர்கள் நேற்று வண்ணமய மான 3டி ஓவியங்களை வரைந்து, அப்பகுதியை அழகாக்கினர்.
‘தி அக்லி இந்தியன்’ அமைப்பு, பெங்களூருவை தலைமையிட மாகக் கொண்டு இயங்குகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை அரும்பாக்கம் ‘ஸ்கை வாக்’ அருகே உள்ள மேம்பாலத் தின் சுவர்களை சில மாதங்களுக்கு முன்பு 3டி ஓவியங்களால் அலங்கரித்தனர்.
இந்நிலையில், புரசைவாக்கம் டவுட்டன் பகுதிகளில் உள்ள சுற்றுச்சுவர்கள், மேம்பாலங் களிலும் 3டி ஓவியங்களை இந்த அமைப்பினர் நேற்று வரைந்தனர்.
இதுபற்றி ‘தி அக்லி இந்தியன்’ அமைப்பை சேர்ந்த கே.முரளி கிருஷ்ணா, ‘தி இந்து’விடம் கூறியதாவது: குப்பைக் கூளங் களும், அசுத்தமும்தான் இந்தியா வின் முகம் என்ற எண்ணம் வெளி நாட்டினருக்கு உள்ளது. தவிர, சூழலை நாம் சரியாகப் பராமரிக் காததால், மக்களுக்கும் பல சுகா தார கேடுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எங்கள் அமைப்பை தொடங்கினோம். இதில், 3டி ஓவியங்கள் வரையத் தெரிந்த கலைஞர்கள் பலர் உள்ள னர். இவர்களைக் கொண்டு பெங் களூருவில் 20-க்கு மேற்பட்ட மேம் பாலங்கள், பொது இடங்களில் 3டி ஓவியங்களை வரைந்துள்ளோம்.
இதையடுத்து, சென்னையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி யுள்ளோம். ஆற்றல் பாதுகாப்பு, மின்சார சிக்கனம், மாசுக் கட்டுப் பாடு உள்ளிட்டவற்றை வலியுறுத் தும் ஓவியங்களை ‘ஸ்கை வாக்’ அருகே உள்ள மேம்பாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரைந்தோம்.
எங்கள் முயற்சியின் அடுத்த கட்டமாக, சென்னையின் மிக நெருக்கடியான பகுதியான புரசை வாக்கத்தில், டவுட்டன் மேம் பாலத்தை அழகுபடுத்த திட்டமிட் டோம். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் ஒப்புதல் தந்தனர். இதையடுத்து, பூமி பாதுகாப்பு, மது, புகையிலையின் தீமைகள், தண்ணீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றை வலியுற்றுத்தும் 3டி ஓவியங்களை வரைந்துள்ளோம். நான், அருண் உட்பட 30-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டோம்.
நாங்கள் ஓவியங்களை வரைந்து முடித்த பிறகு, யாராவது போஸ்டர் ஒட்டுகிறார்களா, அசுத் தப்படுகிறார்களா என்று மாநக ராட்சி பணியாளர்கள் 10 நாட்கள் வரை கண்காணிப்பார்கள். யாரா வது போஸ்டர் ஒட்டினால், அப்புறப் படுத்தப்படும். அதன் பிறகும் அசுத் தப்படுத்தப்படுவது தொடர்ந்தால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அனைத்து நகரங்களையும் சுத்தமாக்கும் வரை எங்கள் பணி தொடரும். அதுவரை, எங்கள் அமைப்பின் பெயர் ‘தி அக்லி இந்தியன்’ (அழுக்கு இந்தியன்) என்றே இருக்கும். நகரங்கள் அழகானதும், எங்கள் அமைப்பின் பெயர் ‘தி பியூட்டிஃபுல் இந்தியன்’ என்று மாற்றப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT