Published : 16 Oct 2014 10:57 AM
Last Updated : 16 Oct 2014 10:57 AM
தாம்பரம் மற்றும் அமைந்தகரையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங் களில் வெப் கேமரா பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம், சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத் தில் இருந்து அந்த அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை எளிதாக கண் காணிக்க முடியும்.
சென்னையில் உள்ள மண்டல பாஸ் போர்ட் அலுவலகம், 1955-ம் ஆண்டு ஜார்ஜ் டவுன் பகுதியில் தொடங்கப் பட்டது. பின்னர், 1966-ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. வெளி நாடுகளுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக செல்பவர்கள் பாஸ் போர்ட் எடுக்க, தினமும் ஆயிரக்கணக் கானோர் வருகின்றனர். சாஸ்திரி பவன் கட்டிடத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால், அங்கு கடும் இடநெருக் கடி ஏற்பட்டது. இதையடுத்து, அண்ணா சாலையில் உள்ள ராயலா டவர்ஸ் கட்டிடத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் 2012-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
சென்னை, சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், காரைக்கால், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்கும் விதமாக, சென்னையில் உள்ள வடபழனி, தாம்பரம் மற்றும் அமைந்தகரையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) அமைக்கப்பட்டுள்ளன. பாஸ் போர்ட் வேண்டி விண்ணப்பிப் பவர்கள் மேற்கண்ட இடங்களில் உள்ள மையத்திற்கு சென்று விண்ணப் பிக்கலாம். இந்த மையங்களில் பணிகள் ஒழுங்காக நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணிக்க வெப் கேமரா பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில்பாண்டியன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் அவற்றின் கட்டுப் பாட்டின் கீழ் வடபழனி, தாம்பரம் மற்றும் அமைந்தகரையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இங்கு நாளொன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் கோரி வருகின்றனர்.
இங்கு அவர்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கின்றதா என்பதைக் கண்காணிப்பதற்காக வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்படி, தற்போது வடபழனியில் வெப் கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இதன் மூலம், அங்கு நடைபெறும் பணிகளை என்னுடைய அறையில் பொருத்தப்பட்டுள்ள திரை யில் பார்த்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், தாம்பரம் மற்றும் அமைந்தகரையில் உள்ள சேவை மையங்களிலும் வெப் கேமரா பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருவாரத்துக்குள் அவை பொருத்தப்படும்.
இதன் மூலம், அந்த அலுவலகங் களில் நடைபெறும் பணிகள், தினமும் எத்தனைப் பேர் வருகின்றனர், தேவை யின்றி கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் அசம்பாவித சம் பவங்கள் நிகழாமல் தடுப்பது உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க முடியும்.
இவ்வாறு செந்தில்பாண்டியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT