Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனித்துப் போட்டியிடும் அதிமுக, தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக் கும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும் முதல் குழுவில் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 7 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவானது சட்டமன்றத் தொகுதி வாரியாக 7 பேர் கொண்ட குழுக்களை அமைக்கும்.
சட்டமன்றக் குழுவானது தங்கள் எல்லைக்குள் ஒன்றியக்குழு, நகரக் குழு, பேரூராட்சிக் குழு மற்றும் மாநகராட்சிக் குழு என 4 குழுக்களை அமைக்கும். இந்த குழுக்களிலும் தலா 7 பேர் அங்கத்தினர்களாக இருப்பார்கள். இவர்களோடு ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிச் செயலர்கள் உள்ளிட்டோரும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப் பாளர்களாக செயல்படுவார்கள்.
இதற்கு அடுத்தபடியாக 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒன்று வீதம் மண்டலக் குழுக்கள் அமைக்கப்படும். இதிலும் தலா 7 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இல்லாமல் 16 பேர் கொண்ட பூத் கமிட்டியும் அமைக்கப்படுகிறது. இளைஞர் பாசறையில் நால்வரும் இளம்பெண்கள் பாசறையில் இருவரும் மகளிர் அணியில் இருவரும் பூத் கமிட்டியில் அவசியம் இடம்பெற வேண்டும் என்றும் அதிமுக-வினருக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT