Published : 01 Oct 2014 11:37 AM
Last Updated : 01 Oct 2014 11:37 AM

உலக வெப்பமயமாதலைத் தடுக்க மோட்டார் வாகனமில்லா போக்குவரத்துக் கொள்கை

உலக வெப்பமயமாதலைத் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து கொள்கை உருவாக்கப்பட்டு, மன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் விவரம்: இந்த உலகம் போக்கு வரத்து வாகனங்களால் இழந்து வரும் அளப்பறிய செல்வங்களுள் முக்கியமானது காற்று மற்றும் புவியின் குளிர்ச்சி ஆகும். வாகனப் புகையால் ஆயிரக்கணக்கான தாவர, விலங்கின வகைகள் அழிந்து வருகின் றன. மக்கள் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர். இனியாவது விழித்திட வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தின்படி, உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து கொள்கையை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து என்பது நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது, ரிக்ஷா வண்டி இயக்குவது, தள்ளுவண்டி மற்றும் மனிதர்களால் இயக்கப்படும் இதர வகை போக்குவரத்து சாதனங்களாகும். இதற்காக பொது இடங்களில் தகுந்த உள் கட்டமைப்பு வசதிகளை அமைக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் பாதசாரிகள், மிதிவண்டி பயன்படுத்துவோர் பெரிதும் பயன்பெறுவர். மேலும் நடப்பவர், மிதிவண்டி பயன்படுத்துவோர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதே இக்கொள்கையின் குறிக்கோள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x