Published : 19 Jan 2014 03:47 PM
Last Updated : 19 Jan 2014 03:47 PM
தமிழகம் முழுவதும் 27 விடுதி களுக்கு சொந்த கட்டிடம் கட்ட ஒரு விடுதிக்கு ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகள், 42 பழங்குடியினர் விடுதிகள் என மொத்தம் 1,342 மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.
மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்க அதிக விடுதிகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான புதிய விடுதிகள் தொடங்குவதற்கும், வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டார். அதன்படி, இந்த ஆண்டு வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் 54 விடுதிகளில், அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தலா ஒன்றும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 விடுதிகள், சேலம் மாவட்டத்தில் 2 விடுதிகள், சிவகங்கை மாவட்டத்தில் 3 விடுதிகள், திருச்சி மாவட்டத்தில் 2 விடுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 விடுதிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 4 விடுதிகள் என மொத்தம் 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த 27 விடுதிகள் கட்ட விடுதி ஒன்றுக்கு ரூ.1 கோடி வீதம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுதிகளில் 5 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் கலன் அமைப்பு நிறுவப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கையால், நல்ல கட்டமைப்பு வசதியுடன் கூடிய விடுதிகளில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்க வழிவகை ஏற்படும். அவர் கள் கல்வியில் மேன்மை அடைய இயலும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT