Published : 23 May 2017 09:02 AM
Last Updated : 23 May 2017 09:02 AM

‘நீட்’ தேர்வு கடினமாக இருந்ததால் வேளாண் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்

‘நீட்’ தேர்வு கடினமாக இருந்ததால் பிளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிப் பெண் எடுத்த மாணவ, மாணவி களின் பார்வை இந்த ஆண்டு வேளாண் படிப்புகள் பக்கம் திரும்பியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் 12 இணைப்புக் கல்லூரிகள், 21 தனி யார் வேளாண்மை கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரி களில் 6 பிஎஸ்சி பாடப் பிரிவுகள், 7 பி.டெக் பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர ஒரே விண் ணப்பம்தான். கவுன்சலிங் மூலம் தகுதியான பாடப் பிரிவுகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதுதவிர சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் காந்திகிராமம் பல் கலைக்கழகத்திலும், வேளாண்மை பட்டப் படிப்பு கள் உள்ளன. வேளாண் படிப்பு களுக்கு குறைவான இடங்களே உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் இதில் சேர மாணவ, மாணவி களிடையே போட்டி அதிகமாகி வருகிறது. இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு கடினமாக இருந்ததாகக் கூறப்படுவதால் மருத்துவப் படிப் புக்கு நிகராக வேளாண் படிப்பு களில் சேர மாணவ, மாணவிய ரிடையே ஆர்வம் அதிகரித் துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: வேளாண் படிப்புகளுக்கு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள போட்டிக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் இந்த படிப்புக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் ஒரு காரணம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப்-1, குரூப்-2 போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் வெற்றி பெறுவதற்கான எளிமையான பாடத்திட்டங்கள் வேளாண் படிப்புகளில் உள்ளதும் மற்றொரு முக்கியக் காரணம். அதனால் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு இணையாக வேளாண் படிப்புகளை தேர்வு செய்ய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த ஆண்டு இந்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளதற்கு ‘நீட்’ தேர்வும் முக்கியக் காரணமாக இருக்கலாம். தமிழ்வழி மூலம் படித்த மாணவர்கள் மட்டுமில்லாது ஆங்கிலவழி மூலம் படித்த மாண வர்களும் ‘நீட்’ தேர்வு கடின மாகவே இருந்ததாகக் கூறியுள்ள னர். அதனால், பிளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுடைய பார்வை வேளாண் படிப்புகள் மீது அதிக மாக திரும்பியுள்ளது.

வேளாண் படிப்புகளை முடிப் பவர்களுக்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறையில் அதி காரியாகவும், வேளாண் பல்லைக் கழகத்தில் விஞ்ஞானியாகவும், கல்லூரிகளில் உதவிப் பேராசிரி யராகவும் வாய்ப்பு உள்ளது. தானிய கிடங்குகள், வங்கிகளில் வேளாண் பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதுதவிர தனி யார் எஸ்டேட், உரம், பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள், தென்னை, ரப்பர், காபி வாரியங் களில் அதிகாரிகள், விஞ்ஞானி களாகவும் பணிபுரிய இந்தியா முழுவதுமே பரவலாக வேலை வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மேலை நாடுகளில் பணிபுரியவும், சுயதொழில் நடத்தவும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

அதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு வெளியானது முதல் ஆன்லைன் மூலம் விண் ணப்பங்கள் பெறப்பட்டதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். கால அவகாசம் ஜூன் 4 வரை உள்ளதால் அதற்குள் இன்னும் பல ஆயிரம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x