Published : 14 Jan 2017 10:38 AM
Last Updated : 14 Jan 2017 10:38 AM

3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பண்டிகை: மாடுகளை அவிழ்க்க மாட்டோம் என எழுதி வாங்கும் போலீஸார்- சோகத்தில் மூழ்கிய ஜல்லிக்கட்டு கிராமங்கள்

உச்ச நீதிமன்றம் தடையை நீக்க மறுத்ததால் தமிழகத்தில் மூன்றா வது ஆண்டாக ஜல்லிக்கட்டு இல் லாத பொங்கல் பண்டிகை கொண் டாடப்படுகிறது. இதனால் ஜல்லிக் கட்டு கிராமங்கள் பொங்கல் பண் டிகை உற்சாகம் இன்றி சோகத்தில் மூழ்கியுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் கிராமங்கள்தோறும் ஜல்லிக்கட்டு திருவிழாபோல் நடத் தப்படுவது வழக்கம். நீதிமன்றத்தின் நெருக்கடி, மாவட்ட நிர்வாகங்கள் கெடுபிடி இல்லாதது ஆகிய காலத்தில் தமிழகத்தில் 1,500 முதல் 2,000 கிராமங்களில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடந்தது. கடைசியாக 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அனுமதியோடு 23 கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடந்தது.

அதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றத் தடையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்க வில்லை. இதனால் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கை மாடு வளர்ப்போரிடம் இல்லாததால் ஜல்லிக்கட்டு காளை கள் வளர்க்கும் ஆர்வம் குறைந்தது. இதன் மூலம் காளைகள் எண்ணிக் கையும் பலமடங்கு சரிந்தன.

இந்த ஆண்டும் உச்ச நீதிமன்றம் தற்போது வரை தடையை நீக்கி அனுமதி வழங்கவில்லை. அதனால், தொடர்ந்து 3-வது ஆண்டாக தமி ழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வில்லை. இதனால் மதுரை மாவட் டம் அலங்காநல்லூர், அவனியா புரம், பாலமேடு உட்பட தென் தமிழ கத்தில் ஜல்லிக்கட்டு கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன. பொங் கல் பண்டிகை ஆரவாரம் இன்றி மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வை யாளர்கள் வீடுகளில் முடங்கி யுள்ளதால் ஜல்லிக்கட்டு கிராமங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

போலீஸ் கண்காணிப்பு

பொங்கல் அன்று, மாடுகளை அவிழ்த்து விடுவதை தடுக்க ஜல்லிக் கட்டு கிராமங்களின் வாடிவாசல் பகுதிகளிலும், மாடு வளர்ப்போர் வீடுகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். மாடு வளர்ப்போரைக் கணக் கெடுத்து, அவர்களிடம் பொங்கல் அன்று காளைகளை அவிழ்த்து விடமாட்டோம் என போலீஸார் எழுதி வாங்கி வருவதால், ஜல்லிக் கட்டு ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து வீர விளையாட்டு மீட்புக் குழு மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தடையால் தமிழ கத்தின் கலாச்சாரம், வீரத்தின் அடை யாளமாக இருந்த ஜல்லிக்கட்டு படிப்படியாக அழிந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பண்டிகையை கறுப்புப் பொங்கலாக அனுசரிக்க உள்ளோம். சட்டரீதியாக கடைசி வரை முயற்சிகள் எடுத்தோம். எங்களை மாநில அரசும், மத்திய அரசும் கைவிட்டுள்ளது.

பசு மாடுகள், காளை மாடு களுக்காகவே மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. `அன்றைய தினம் மாடுகளை அவிழ்த்துவிடக் கூடாது. வீட்டிலே மாடுகளை அலங்கரித்து பூஜை செய்து கொள்ளுங்கள்’ எனப் போலீஸார், மாடு வளர்ப்போரிடம் எழுதி வாங்கு வதற்குப் பதில் பொங்கல் பண்டி கையை கொண்டாட வேண்டாம் என தமிழக அரசு சொல்லிவிடலாம். தமிழக முதல்வர் குறைந்தபட்சம் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அவிழ்க்கவே கூடாது என்கிற கட்டாய நிபந்தனையைத் தளர்த்த வேண்டும்’ என்றார்.

காளைகளுக்கு வழிபாடு நடத்த தடை

பொங்கல் (தை-1), மாட்டுப் பொங்கல் (தை-2) ஆகிய நாட்களில் தமிழர்களின் வீடுகளில் மட்டுமின்றி, கிராமக் கோயில்களிலும் திருவிழாக்கள் களைகட்டும். விவசாயிகள், தாங்கள் வளர்க்கக்கூடிய காளை, பசு, எருமை உள்ளிட்ட மாடுகளை அலங்கரித்து, மாலை அணிவித்து, கொம்புகளுக்கு வர்ணம் பூசி கோயில்களுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தப்படும். பின்னர் மாடுகளின் மீது விபூதி, குங்குமம், சந்தனத்தைப் பூசிவிட்டு, பொங்கல் ஊட்டிவிடுவர். அதன்பிறகு ஒரே நேரத்தில் அனைத்து மாடுகளும் அங்கிருந்து அவிழ்த்து விடப்படும். இது கிராமங்களில் காலம்காலமாக கடைப்பிடிக்கப்படும் பொங்கல் வழிபாட்டு முறை.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் காளைகளைக் கோயிலுக்கு அழைத்து வந்து, ஒரே இடத்தில் நிறுத்தி வழிபாடு நடத்துவதற்கும் காவல் துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதுகுறித்து, தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநிலச் செயலாளர் ஒண்டிராஜ் கூறும்போது, உச்ச நீதிமன்றம் காளைகளைக் கோயில்களுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தக்கூடாது என ஒருபோதும் கூறவில்லை. ஆனால், ஜல்லிக்கட்டு, காளைகள் வழிபாடு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு தெரியாததால், போலீஸார் சில ஆண்டுகளாக கோயில்களில் காளைகளுக்கு கூட்டு வழிபாடு நடத்த அனுமதி மறுத்து வருகின்றனர். இது தவறான நடைமுறை. விவசாயிகளின் வழிபாட்டு உரிமையை மீறும் செயலாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x