Published : 04 Apr 2017 07:54 AM
Last Updated : 04 Apr 2017 07:54 AM
பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிரொலியாக வங்கிகளில் கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக தமிழகம் மற்றும் புதுவையில் சந்தேகத்துக்குரிய 30 ஆயிரம் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காகவும், தீவிர வாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதி லாக புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கள் மற்றும் புதிய வடிவிலான 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப் பட்டன. பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை மாற்றித் தரப்பட்டன.
இந்நிலையில், சிலர் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை மாற்ற வங்கிகளில் அதை டெபாசிட் செய்துள்ளனர். அந்த வகையில், சந்தேகத்துக்குரிய 30 ஆயிரம் வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்ட பிறகு பலர் கணக்கில் வராத பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் புதிய கணக்குகளைத் தொடங்கி உள்ளனர். நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களில் அதிகளவில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகம் மற் றும் புதுவையில் கறுப்புப் பணத்தை மாற்ற சந்தேகத்துக்குரிய வகையில் 30 ஆயிரம் வங்கிக் கணக்குகள் பயன் படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த வங்கிக் கணக்குகளில் அதிக பட்சமாக ரூ.90 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சத்துக் கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவை கணினி மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதிகளவு பணம் டெபாசிட் செய்தவர் களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. இதற்கு பலர் விளக் கம் அளித்துள்ளனர். சிலர் ‘பிரதம மந் திரி கரீப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ், தாங்கள் டெபாசிட் செய்த பணத்தை கறுப்புப் பணம் என ஒப்புக் கொண்டுள்ளனர். அவ்வாறு ஒப்புக் கொண்டுள்ளவர்களிடம் 45 சதவீதம் வரி வசூலிக்கப்படும். இதையே நாங்கள் கண்டுபிடித்தால் 83.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT