Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

சூரிய சக்தி மின்சாரம் குறித்த ஒழுங்குமுறை ஆணைய உத்தரவு ரத்து- மின்சாரத் தீர்ப்பாய தீர்ப்பால் திடீர் சிக்கல்

வரும் 2015-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி மூலம் 3,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இலக்குடன், தமிழக அரசு சூரிய மின் சக்தி கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன் அடிப் படையில், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நுகர்வோர், குறைந்தது 6 சதவீதம் சூரிய சக்தி மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும். இதுகுறித்து ஒப்பந்தம் செய்யவும் வாங்கும் முறை குறித்தும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த 2012-ல் விதிமுறைகளை வகுத்து உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து பல்வேறு நிறு வனங்கள் சார்பில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ‘டாஸ்மா’ சார்பில், மத்திய மின்சாரத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு வில், ‘சூரிய சக்தி குறித்த ஒழுங்கு முறை ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது

இந்த மனு மீது ஒன்பது மாதங்க ளாக வாதம் நடந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை மின்சாரத் தீர்ப்பாய கிளை பெஞ்சில், தீர்ப்பாயத் தலைவர் கற்பகவிநாயகம் மற்றும் உறுப்பினர் ராகேஷ்நாத் தீர்ப்பளித்தனர். சூரியசக்தி மின்சாரம் குறித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ‘டாஸ்மா’வின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து, டாஸ்மா தலைமை ஆலோசகர் டாக்டர் கே.வெங்கடாசலம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘டாஸ்மா’ எந்த விதத்திலும் சூரியசக்தி உற்பத்தியை எதிர்க்கவில்லை. ஏற்கெனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான காற்றாலை மின்சாரத்தை, டாஸ்மா உறுப்பினராக உள்ள ஆலைகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே அமல்படுத்தும் சட்டப்படி, 8.95 சதவீதம் சூரியசக்தி அல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும், 0.05 சதவீதம் சூரிய சக்தியும் பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு, அதை கடை பிடித்து வருகிறோம். அதற்கு மேல், 6 சதவீதம் சூரியசக்தி பயன் படுத்துவது என்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆணையத்தின் உத்தரவை தீர்பாயம் ரத்து செய்துள்ளதால் சூரியசக்தி முதலீட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x