Published : 18 Jun 2016 10:48 AM
Last Updated : 18 Jun 2016 10:48 AM
காட்டுக் கோழிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
காட்டுக் கோழிகள் இன்றைய நாட்டுக் கோழிகளின் மூதாதையர் கள். இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காலஸ் சொன்னிராட்டி என்ற பழுப்பு நிற காட்டுக் கோழி கள் பெரும்பாலும் தென்னிந்தியா வில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. மற்றொரு சிவப்பு நிற காட்டுக் கோழிகள் வட இந்தியாவில் இமா லயப் பகுதிகளில் காணப்படுகின் றன.
17 சிற்றினங்கள்
காட்டுக் கோழிகள் சர்வதேச அளவில் இந்தியா, இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளில் பரவலாக உள்ளன. ஒரு காலத் தில் காட்டுக் கோழிகளில் 17 சிற்றினங்கள் இருந்தன. தற்போது 4 சிற்றின காட்டுக் கோழி இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. காட் டுக் கோழிகள் இனம் வேகமாக அழிந்து வருவதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வன ஆர்வலரும், காந்திகிராமம் கிராமிய பல்கலைக் கழக பேராசிரியருமான ராமசுப்பு கூறியதாவது:
பழுப்பு நிற உடல் அமைப்புடன் ஆங்காங்கே பழுப்பு நிறத்தில், சிவப்பு நிற பட்டைகளுடன் நீண்ட வளைந்த கருப்பு நிற வாலினைக் கொண்டவை சேவல்கள். பெட் டைக் கோழிகள் கருப்பு நிறத் தில் பல்வேறு பழுப்பு நிறப் புள்ளி களைக் கொண்டவை.
இவற்றின் நிறத் தோற்றமானது காடுகள், முட்புதர்களுக்குள் ஒளிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. இந்த காட்டுக் கோழிகள் காட்டுப் பகுதிகள், திறந்தவெளிகள், புல்வெளியற்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழும் இயல்பு கொண்டவை. பெரும்பாலும் தரைப்பகுதியில் தங்களது நேரத்தைக் கழித்தாலும் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக மரங்களின் மேல் பறந்து தாவும்.
இந்த கோழிகள் பிப்ரவரி முதல் மே மாதம் வரை முட்டையிடும். 4 முதல் 7 முட்டைகளையிட்டு அடைகாக்கும். 20 முதல் 21 நாட் களுக்குள் குஞ்சுகள் பொரிந்து வெளிவரும். இதனைப் பெட்டைக் கோழிகள் பராமரிக்கும். சேவல்கள் பொதுவாக 860 - 1,250 கிராம் வரையிலும், பெட்டைக் கோழிகள் 560 - 620 கிராம் எடை வரையிலும் வளரக்கூடியவை. 5 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.
காடுகள் பரவலுக்கு..
விதைகளையும், பூச்சிகளையும் உண்ணக்கூடிய இவை, காடு களில் விதை முளைப்புக்கும், பரவ லுக்கும் பெருமளவில் உதவுகின் றன. இடம்பெயரும் குணம் இல் லாத காட்டுக் கோழிகள் அழியும் தருவாயில் உள்ளதாக அறியப்பட் டுள்ளது.
2012-ம் ஆண்டு வரை நடந்த ஆய்வின்படி முன்பு இருந்த காட்டுக் கோழிகளில் 30 சதவீதம் அழிந்துவிட்டதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத காட்டுக் கோழிகள் தற்போது அழிந்துகொண்டு இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 20 குழுக்கள் என்ற முறையில் ஒரு காலத்தில் இருந்த இவை தற்போது வேகமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றார்.
அழிவுக்கான முக்கிய காரணங்கள்
பேராசிரியர் ராமசுப்பு மேலும் கூறும்போது, “விவசாய நிலங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டதாலும், புல்வெளிப் பரப்புகளில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் நடப்பட்டதாலும், உணவுக்காக அதிகமாக வேட்டையாடப்படுவதாலும் காட்டுக் கோழி இனங்கள் அழிந்து வருகின்றன. தோட்டங்களில் அழகுப் பொருளாக வளர்ப்பதற்காக ஏற்றுமதி செய்யப்படுவதும் இதன் அழிவுக்கு மற்றொரு காரணம். காட்டுப் பூனைகள் மற்றும் இதர விலங்குகளின் முக்கிய இரையான இவை பெருமளவு வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன.
சேவல்களின் முதுகுப் பகுதியில் காணப்படும் வண்ணமிகு இறக்கைகளுக்காக இக்கோழிகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு 20-ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் இவ்வகை கோழிகளை அழிவிலிருந்து பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT