Published : 27 Jan 2014 01:39 PM
Last Updated : 27 Jan 2014 01:39 PM

மூத்த பத்திரிகையாளர் ரா.அ.பத்மநாபன் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் ரா.அ.பத்மநாபன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 96. அவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

தனது 16-வது வயதில் ஆனந்த விகடன் இதழில் பணியை துவக்கிய ரா.அ.பத்மநாபன் பின்நாளில் தினமணி கதிர் மற்றும் தி இந்து நாளிதழ்களில் பணியாற்றினார்.

ரா.அ.பத்மநாபன் பாரதியாரின் படைப்புகளில் பலவற்றைத் தொகுத்திருக்கிறார். பாரதி படைப்புகளில் ஆய்வுகளும் மேற்கொண்டார்.

ரா.அ.பத்மநாபன் பணிகள் குறித்து: "பாரதியின் கவிதைப் படைப்புகள், கடிதங்கள், கட்டுரைகள்,ஆகியவை இன்று நமக்கு எளிதாகக் கிடைக்க பத்மநாபநே காரணம்" என வரலாற்று ஆய்வாளர் வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.

'சித்திர பாரதி' என்ற பாரதியாரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு முதன் முதலில் 1957.ல் இவரால் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாவது பதிப்பு 1982.லும் மூன்றாவது பதிப்பு 2006.லும் வெளியாகின.

சிறந்த எழுத்தாளரான பத்மநாபன், விவிஎஸ்.ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கை சரிதத்தை எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x