Last Updated : 06 Oct, 2014 10:14 AM

 

Published : 06 Oct 2014 10:14 AM
Last Updated : 06 Oct 2014 10:14 AM

சிவகாசிக்கு வேட்டு வைக்கும் சீனப் பட்டாசுகள்: இந்த ஆண்டு மட்டும் ரூ.1500 கோடி வருவாய் இழப்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீனப் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசுத் தொழில் அழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசி மற்றும் அதையொட் டிய பகுதிகளில், சுமார் 780 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் மூலம் 2 லட்சத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90 சதவீதத்தை சிவகாசிதான் பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடை பெறுகிறது. ஆனால், சிவகாசியை அச்சுறுத்தும் டிராகனாக உரு வெடுத்துள்ளன சீனப் பட்டாசுகள். பொம்மைகள் மற்றும் இரும்புக் கழிவுகள் என்ற பெயரில் சீனாவி லிருந்து ஏராளமான கண்டெய் னர்களில் கள்ளத்தனமாக சீனப் பட்டாசுகள் வந்த வண்ணம் இருக் கிறது. இந்த ஆண்டு, சுமார் 2 ஆயிரம் கண்டெய்னர்கள் வர வழைக்கப்பட்டு சில்லறை விற் பனைக் கடைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அபிரூபன் கூறும்போது, ‘சீனப் பட்டாசு வருகை யால் சில்லறை வியாபாரிகள் கொள்முதல் அளவைக் குறைத்து விட்டனர். இதனால் மொத்த வியா பாரிகளும் கொள்முதல் அளவை குறைத்து கொண்டனர். இதனால் இந்த ஆண்டு 35 சதவிகிதம் பட்டாசு விற்பனை சரிந்து, சுமார் ரூ. 1,500 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.

முன்னாள் தலைவர் ஏ.பி. செல்வராஜனிடம் கேட்டபோது, ‘சீனப் பட்டாசை தடுக்க துறைமுகங் களில் அனைத்து கண்டெய்னர் களும் 100 சதவிகிதம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதைத் தாண்டி கொண்டு வரப்படும் சீனப் பட்டாசுகளை பறிமுதல் செய்து அழித்து விட்டால் அவற்றை இறக்குமதி செய்த நபருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, மீண் டும் இதுபோன்ற வேலையை யாரும் செய்ய மாட்டார்கள். சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்யும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்ய வேண்டும். சீனப் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் குளோரைடு என்ற வேதிப்பொருளுக்கு நம்மூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால், இதனை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கும் அபாயமும் உள்ளது.

நாம் தரமான பட்டாசுகளை உற்பத்தி செய்தால், அதோடு சீனப் பட்டாசுகள் போட்டியிட முடியாது. பட்டாசுக்கான விலை நியாயமாக இருக்க எம்.ஆர்.பி. அச்சிடப்பட்டால் சீனப் பட்டாசுகள் நமது தயாரிப்போடு போட்டியிட முடியாது’ என்றார்.

இந்திய பட்டாசு தயாரிப்பாளர் கள் சங்க பொதுச் செயலர் கண்ணனிடம் கேட்டபோது, சீனப் பட்டாசுகளை தயாரிக்க பொட்டா ஷியம், குளோரைடு, சல்பர், சிவப்பு பாஸ்பரஸ் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. இந்த ரசாயனங்கள் வெப்பநிலை அதிகரித்தால், தானாக வெடிக்கும். குளோரைடு ஒரு கிலோ விலை ரூ. 40 முதல் ரூ. 50 வரைதான். ஆனால், சிவகாசி யில் பட்டாசு தயாரிக்க பயன் படுத்தப்படும் அலுமினிய பவுடரின் விலை ஒரு கிலோ ரூ. 450.

இதனால், குறைந்த விலையில் சீனாவில் பட்டாசுகளை தயாரித்து, இந்தியாவுக்கு கொண்டு வரு வதில் பெரிய கும்பலே ஈடுபட்டுள் ளது. சீனப் பட்டாசுகளை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே கருதுகிறோம். சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை காக்க சீனப் பட்டாசு இறக்குமதியை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x