Published : 22 Mar 2017 09:37 AM
Last Updated : 22 Mar 2017 09:37 AM

சுற்றுலாப் பயணிகளை கவரும் கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் விலங்குகள், பறவைகள் போன்று வண்ணத்துப்பூச்சிகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. சீசன் காலத்தில் விவசாயத் தோட்டம், குடியிருப்புப் பகுதிகளில் அவற் றின் அழகை ரசிக்க முடியும். வண்ணத்துப்பூச்சிகளால் பூக்களில் அதிக மகரந்தச் சேர்க்கை நடந்து, விவசாயத்தில் விளைச்சலும் கிடைப்பதால் விவசாயிகளின் நண்பனாகவும் உள்ளது.

கூடலூர், முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் காலை நேரத் தில் ஆயிரக்கணக்கான வண்ணத் துப்பூச்சிகள் கூட்டம், கூட்டமாக பறந்து செல்லும். இவற்றை சுற்றுலாப் பயணிகள் ரசிப்பதுடன், புகைப்படங்களும் எடுத்துச் செல் வர். எனவே, சுற்றுலாப் பயணி களை கவரும் வகையில் கூடலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, கூடலூரை அடுத்த தேவாலா அரசு தோட்டக் கலைப் பண்ணையில், மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டது. முன் னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2015-ம் ஆண்டு இதைத் திறந்துவைத்தார்.

இப்பூங்காவுக்காக 0.25 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைக்கப்பட் டுள்ளன. இதில் வண்ணத்துப் பூச்சிகளின் இரை, இனப்பெருக்கம், முட்டையிடுதல் ஆகியவற்றுக்கான மலர்ச் செடிகள் வளர்க்கப்பட்டு, சீரான வெப்பநிலையும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

வண்ணத்துப்பூச்சிகளைக் கவரும் குரோடோலேரியா லாஞ்டெஸ் செடி.

தும்பை, சங்கு வகைகளைச் சார்ந்த செடிகளை வண்ணத்துப் பூச்சிகள் அதிக அளவில் நாடி வருகின்றன. இதையறிந்து, கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில், சோதனை முறையில் குரோடோ லேரியா லாஞ்டெஸ் செடிகள் வளர்க்கப்படுகின்றன. சீஸன் காலத்தில், இச்செடிகளில் கூட்டம், கூட்டமாக வண்ணத்துப்பூச்சிகளை காண முடியும்.

இதுதொடர்பாக தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் என்.மணி கூறும்போது, “தேவாலா தோட்டக்கலைப் பண்ணையில் ஆண்டு முழுவதும் வண்ணத் துப்பூச்சிகளை வரவழைக்கும் வகையிலும், சுற்றுலாப் பணி களைக் கவரும் வகையிலும் இப்பூங்கா அமைக்கப்பட் டுள்ளது.

வண்ணத்துப்பூச்சிகளைக் கவர குரோடோலேரியா லாஞ்டெஸ் உட்பட 12 வகையான செடிகள் வளர்க்கப்படுகின்றன. சீஸன் காலத்தில், இச்செடிகளில் வண் ணத்துப்பூச்சி முட்டையிட்டு, அவை வளர்ந்து வண்ணத்துப்பூச்சிகளாக இடம்பெயர்ந்து செல்கின்றன.

இப்பூங்காவை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலப்படுத்தும் வகையில், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மேலும், பண்ணையில் தேயிலை, சில்வர் ஓக், பாக்கு, குருமிளகு, ஜாதிக்காய், கிராம்பு நாற்றுகள் மலிவான விலையில் விற்கப்படுகின்றன. ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இப்பூங்கா பயனுள்ளதாக இருக் கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x