Published : 31 Mar 2014 12:03 PM
Last Updated : 31 Mar 2014 12:03 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களான சுதாகர் ரெட்டி, டி.ராஜா ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து தனித்துப் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இவர்களுக்கு ஆதரவு திரட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.
அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, ஏப்ரல் 4-ம் தேதி திருப்பூரிலும் 5-ம் தேதி கோவையிலும் பிரச்சாரம் செய்கிறார். மாநிலங்களவை உறுப்பினரும் தேசியச் செயலாள ருமான டி.ராஜா 11-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 12-ம் தேதி கடலூர், 13-ல் சென்னை, 14-ல் கோவை மற்றும் திருப்பூரில் பிரச்சாரம் செய்கிறார்.
கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விருதுநகர் மற்றும் வில்லிபுத்தூரில் இன்று (திங்கள்கிழமை) பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 1-ம் தேதி ராஜபாளையம், 2-தஞ்சாவூர், 3-திருவாரூர், 6-அந்தியூர், 7-கோபி செட்டிப்பாளையம், 16-விழுப்புரம், 17-கடலூர், 18-புதுச்சேரி, 20-வடசென்னை, 21-திருவள் ளூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT