Published : 28 Mar 2014 12:32 PM
Last Updated : 28 Mar 2014 12:32 PM
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நீர்த்துப்போனது என்று பரவலாக கூறப்பட்டாலும், 23 நாடுகள் அந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவும் அந்த தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும்" என்றார்.
மதச்சார்பற்ற அணி அமையும்போது காங்கிரசை திமுக ஆதரிக்கும் என கருணாநிதி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், "காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஒரு மதச்சார்பற்ற கட்சி. கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறேன்" என தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த அவர், மக்களவை தேர்தல் நிறைய ஆச்சர்யமான முடிவுகளை அளிக்கும் என்றார்.
சிதம்பரம் ஒரு தமிழர்:
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "சிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் கண்டிப்பாக அப்படித் தான் கூறுவார். ஆனால் தீர்மானத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் ஒரு தேசிய கட்சியாக இருந்து காங்கிரஸ் முடிவு செய்யக்கூடிய விஷயம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT