Published : 23 Oct 2013 11:00 AM
Last Updated : 23 Oct 2013 11:00 AM

ஆசிரியர் குழு, நிர்வாகத் தலைமையில் மாற்றம்: தி இந்து ஊழியர் சங்கம் வரவேற்பு

‘தி இந்து’ நாளிதழின் எடிட்டர்-இன்-சீஃப் ஆக என். ரவி, எடிட்டர் ஆக மாலினி பார்த்தசாரதி, கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட்டின் சேர்மன் மற்றும் இக்குழும வெளியீடுகளின் பதிப்பாளராக என். ராம், கே.எஸ்.எல் நிறுவனத்தின் இணை சேர்மனாக என். முரளி பொறுப்பேற்றுள்ளதை ‘தி இந்து ஆபிஸ் அண்ட் நேஷனல் பிரஸ் எம்ப்ளாயீஸ்’ சங்கம் வரவேற்றுள்ளது.

சங்கத் தலைவர் இ.கோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த 2 ஆண்டுகளாக இருந்த கார்ப்பரேட் நிர்வாக முறையால் நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளிலும், ஊழியர்களுக்கு இடையேயும் கருத்து வேறுபாடுகளும், இணக்கமற்ற சூழ்நிலையும் நிலவியது. இந்நிலையில், இந்நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் சரியான நேரத்தில் ஆசிரியர் குழு மற்றும் தலைமைப் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தங்களின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள ‘தி இந்து’ பிரதான அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த என். ராம், என். முரளிக்கு ஊழியர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். நிர்வாக மாற்றத்துக்கு ஆதரவாக வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் போனஸ் மற்றும் ஊக்கத்தொகை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிர்வாகத் தரப்பில் என் .ராம், என். முரளி, ஊழியர்கள் தரப்பில் சங்கத் தலைவர் இ. கோபால், பொதுச் செயலாளர் எம். கமலநாதன் கையெழுத்திட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x